மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்) | Kalvimalar - News

மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)

எழுத்தின் அளவு :

10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம்

 

மைய அரசு திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பினை தொடரும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவ / மாணவியர்க்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.1,08,000/-க்கு மிகாமல் இருப்பின், குறிப்பேடுகள் வாங்குதல் போன்ற கட்டாயச் செலவுகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் ஆகியவற்றை ஈடுசெய்ய
அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.330/- வரை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.

 

இவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயில்பவராக இருப்பின் இத்தொகை அவர்கள் பயிலும் படிப்புக்கு ஏற்றவாறு அதிக அளவாக மாதம் ஒன்றிற்கு ரூ.740/- வரை பராமரிப்புப்படியாக வழங்கப்படுகிறது.

 

இவை தவிர மாணவ / மாணவியர்களால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டாயக் கட்டணங்கள் அக்கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us