செவனிங் உதவித்தொகை | Kalvimalar - News

செவனிங் உதவித்தொகை ஜூலை 24,2022,09:17 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டு, காமன்வெல்த், வளர்ச்சி அலுவலகம் மற்றும் இதர அமைப்புகளின் நிதி உதவியுடன், யு.கே., அரசு வழங்கும் இந்த சர்வதேச உதவித்தொகை திட்டத்தில் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



படிப்புகள்: யு.கே., கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 



தகுதியற்ற படிப்புகள்: பகுதிநேர படிப்பு, தொலைநிலைக் கல்வி, 9 மாதங்களுக்கு குறைவான கால அளவு கொண்ட படிப்புகள், 12 மாதங்களுக்கு அதிகமான கால அளவு கொண்ட படிப்புகள், பிஎச்.டி., டி.பில், ஆகிய படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.



சலுகைகள்: கல்விக்கட்டணம், மாத உதவித்தொகை, யு.கே., சென்று வருவதற்கான விமானக் கட்டணம், விசா கட்டணம், தங்குமிட செலவு, செவனிங் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான போக்குவரத்து செலவு  ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.



தகுதிகள்:


* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க, தகுதியான இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.


* குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


* யு.கே.,வில் படித்து பட்டம்பெற்ற பிறகு குறைந்தது 2 ஆண்டுகளில் சொந்த நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும். 


* யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதேனும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில், நிர்ப்பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும். 


* உரிய ஆங்கில மொழிப் புலமையையும் பெற்றிருக்க வேண்டும். 



பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:  பிர்க்பெக் லண்டன், பவுர்ன்மவுத், புரெனெல் பல்கலைக்கழகம் லண்டன், கிரான்பீல்ட், லங்காஸ்டர், எல்.எஸ்.இ., நியுகேசில், நாட்டிங்காம் டிரென்ட், குயின்மேரி லண்டன் பல்கலைக்கழகம், ரோபர்ட் கார்டன், கேம்ப்ரிட்ஜ், லீட்ஸ், கெண்ட், யார்க் டிரினிட்டி கல்லூரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள்.



விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2 



விபரங்களுக்கு: www.chevening.org/scholarship/india



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us