ஜெஸ்ட் தேர்வு | Kalvimalar - News

ஜெஸ்ட் தேர்வு மார்ச் 01,2023,17:22 IST

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறிவியல் பிரிவில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வுகளில் ஒன்று ‘ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் - ஜே.இ.எஸ்.டி.,’



முக்கியத்துவம்:


பார்லிமென்ட்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான 'அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் - எஸ்.இ.ஆர்.பி.,’ ஜெஸ்ட் தேர்வை தேசிய தகுதித் தேர்வாக அங்கீகரிக்கிறது. 



படிப்புகள்: 


எம்.எஸ்சி., - பிசிக்ஸ் / அஸ்ட்ரோபிசிக்ஸ்


ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., / எம்.டெக்., - பிஎச்.டி.,


பிஎச்.டி., அல்லது ஒருங்கிணைந்த பிஎச்.டி., - பிசிக்ஸ், தியரெடிக்கல் கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூரோசயின்ஸ், கம்ப்யூடேஷனல் பயோலஜி.



பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: 


ஐ.ஐ.எஸ்.சி., ஐ.எம்.எஸ்.சி., ஐ.ஐ.ஏ., டி.ஐ.எப்.ஆர்., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஐ.பி.ஆர்., என்.ஐ.எஸ்.இ.ஆர்., ஐ.ஓ.பி., ஐ.யு.சி.ஏ.ஏ., ஐ.என்.சி.ஏ.எஸ்.ஆர்., என்.பி.ஆர்.சி., பி.ஆர்.எல்., ஆர்.ஆர்.சி.ஏ.டி., ஆர்.ஆர்.ஐ., என்.ஐ.என்.பி., ஐ.ஐ.எஸ்.டி., டி.ஐ.எப்.ஆர்., உட்பட பல்வேறு தேசிய அளவிலான முக்கிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜெஸ்ட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.



தகுதிகள்: பொதுவாக பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் அல்லது எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம் என்ற போதிலும், தேர்வு செய்யப்போகும் படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்து தகுதிகள் மாறுபடும்.



வயது வரம்பு: இத்தேர்வை எழுத வயது வரம்பு ஏதும் இல்லை. எனினும், பங்குபெறும் கல்வி நிறுவனங்களைப் பொறுத்து வயதுவரம்பு மாறுபடலாம். 



தேர்வு முறை: நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். ஓர் ஆண்டிற்கு மட்டுமே இத்தேர்வு மதிப்பெண் செல்லுபடியாகும். 



விபரங்களுக்கு: www.jest.org.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us