பாராமெடிக்கல் படிப்புகள் | Kalvimalar - News

பாராமெடிக்கல் படிப்புகள்ஜூன் 29,2023,17:23 IST

எழுத்தின் அளவு :

தொழில் சார்ந்த மருத்துவப் பயிற்சிகளை கொண்ட பாராமெடிக்கல் படிப்புகள் மருத்துவத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதியாகவும் உருவாகியுள்ளது. இத்துறை மாணவர்களின் வேலை வாய்ப்பை மிக எளிதாக்குவதோடு, தன்னலமற்ற, சேவை மிகுந்த துறையாகவே கருதப்படுகிறது.



பி.பார்ம்., - பார்மசி


பி.பி.டி., - பிசியோதெரபி


பி.ஏஎஸ்எல்பி., - ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லேங்குவேஜ் பேத்தாலஜி


பி.எஸ்சி., -  நர்சிங்


பி.எஸ்சி., -  ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  ரேடியோகிராபி டெக்னாலஜி


பி.எஸ்சி., -  கார்டியோ-பல்மொனரி பர்பியூஷன் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  மெடிக்கல் லேபாரெட்டரி டெக்னாலஜி


பி.எஸ்சி., -  ஆப்ரேஷன் தியேட்டர் அண்டு அனெஸ்தீசியா டெக்னாலஜி


பி.எஸ்சி., -  கார்டியாக் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  டயாலிசிஸ் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  பிஷிசியன் அசிஸ்டெண்ட்


பி.எஸ்சி., -  ஆக்சிடெண்ட் அண்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி


பி.எஸ்சி., -  ரெஸ்பிரேட்டரி தெரபி


பி.ஆப்தொமெட்ரி


பி.ஓ.டி., - ஆக்குபேஷனல் தெரபி


பி.எஸ்சி., -  நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி


பி.எஸ்சி., -  கிளினிக்கல் நியூட்டிரிஷன்




கல்வித்தகுதி: 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை படித்திருப்பது பொதுவான கல்வித்தகுதி. 



கல்வி நிறுவனங்கள்: தனியார் கல்வி நிறுவனங்களில் இவை போன்ற மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் பரவலாக வழங்கப்படுகின்றன. என்றபோதிலும், தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வு வாயிலாக குறைவான கல்விக்கட்டணத்தில் இத்தகைய படிப்புகளை படிக்கலாம். 



அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவ, மாணவிகளே தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். அரசு விதிமுறையிப்படி இட ஒதுக்கீடு உண்டு.



விண்ணப்பிக்கும் முறை: https://tnmedicalselection.net அல்லது www.tnhealth.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: https://tnmedicalselection.net 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us