வாய்ப்புகள் மிகுந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் | Kalvimalar - News

வாய்ப்புகள் மிகுந்த கம்ப்யூட்டர் சயின்ஸ்ஆகஸ்ட் 07,2023,15:19 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்களின் விருப்பமான மற்றும் அதிகம் தேர்வு செய்யப்படும் துறைகளில் ஒன்று கம்ப்யூட்டர் சயின்ஸ். குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பிற்கு பெரும் போட்டி நிலவுகிறது.



இப்படிப்பு, நெட்வொர்க்கிங், பேசிக் கம்ப்யூட்டர் புரோகிராமிங், கால்குலேஷன், அல்காரிதம்கள், புரோகிராமிங் லங்குவேஜஸ், புரோகிராம் டிசைனிங், சாப்ட்வேர், ஹார்டுவேர் ஆகிய அடிப்படை பாடத்திட்டங்களை உள்ளடக்கி உள்ளது. உலகளாவிய கணினி சந்தை, நடப்பாண்டு முதல் 2030 வரை ஆண்டுதோறும் சுமார் 9.1% வளர்ச்சி விகிதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 



இளநிலை பட்டப்படிப்புகள்:


பி.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்


பி.டெக்., - கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்


பி.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ் (ஹானர்ஸ்)


பி.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ்


பி.சி.ஏ., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்



முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.டெக்., - கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்


எம்.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ்


எம்.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி


எம்.எஸ்., - கம்ப்யூட்டர் சயின்ஸ்


இவை தவிர, பல்வேறு டிப்ளமா, முதுநிலை டிப்ளமா மற்றும் பிஎச்.டி., படிப்புகளும் வழங்கப்படுகின்றன.



கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



முக்கிய கல்வி நிறுவனங்கள்: பொதுவாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை வழங்குவதில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,கள் சிறந்த கணினி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முக்கிய இடம்பெறுகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை பெரும்பாலும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் வழங்குகின்றன. சிறந்த பேராசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.



வேலை வாய்ப்புகள்:


சிஸ்டம் டிசைனர், கம்ப்யூட்டர் புரோகிராமர், டேட்டா வேர்ஹவுஸ் அனலிஸ்ட், சாப்ட்வேர் இன்ஜினியர், சிஸ்டம் அனலிஸ்ட், ஐ.டி.,- கன்சல்டன்ட், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர், மல்டிமீடியா புரோகிராமர், டெக்னிக்கல் கன்டன்ட் ரைட்டர், இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜர் போன்ற பணிகளில் வாய்ப்புகளை பெறலாம். 



கிரிப்டோகிராபி மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு, டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், புரோக்ராமிங் லாங்குவேஜஸ், ஆபரேடிங் சிஸ்டம்ஸ், கணினி மென்பொருள் நிறுவனங்கள், மொபைல் கம்யூனிகேஷன்ஸ், டிசைன் மற்றும் அனாலிசஸ் ஆப் அல்காரிதம், மைக்ரோபிராசஸர் ஆகிய துறைகளில் பணியாற்றலாம். 



கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்கள் உள்நாட்டு வேலை வாய்ப்பை விட, வெளிநாட்டு வேலைகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அதற்கு முக்கிய காரணம் லட்சங்களில் பெறப்படும் சம்பளம். உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் படித்த இந்திய மாணவர்களின் தேவையும், சேவையும் மிகுதியாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us