கிராமப்புற மேலாண்மை படிப்புகள் | Kalvimalar - News

கிராமப்புற மேலாண்மை படிப்புகள்ஆகஸ்ட் 24,2023,21:12 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், ஹைதராபாத்தில் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் செயல்படுகிறது.




வழங்கப்படும் படிப்புகள்:


* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ரூரல் டெவெலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.ஆர்.எம்.,) - ஓர் ஆண்டு


* போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - ரூரல் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.எம்.,-ஆர்.எம்.,) - 2 ஆண்டுகள்



தகுதிகள்:


பி.ஜி.டி.ஆர்.எம்., படிப்பில் சேர்க்கை பெற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.



பி.ஜி.டி.எம்.,-ஆர்.எம்., படிப்பில் சேர்க்கை பெற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் கேட், சேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ., ஜிமேட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் போதிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 



விண்ணப்பிக்கும் முறை: http://admissions.nirdpr.org.in/regular/login.aspx எனும் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு முறை: இளநிலை பட்டப்படிப்பு அல்லது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அழைக்கப்படும் மாணவர்கள், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.



கல்விக் கட்டணம்: ஆண்டுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். விடுதி மற்றும் இதர கட்டணம் தனி.



உதவித்தொகை: கல்வியில் சிறந்து விளங்கும் சில மாணவர்களுக்கு என்.ஐ.ஆர்.டி.பி.ஆர்., உதவித்தொகை வழங்கப்படுகிறது.



விபரங்களுக்கு: http://nirdpr.org.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us