சி.யு.இ.டி., பி.ஜி., - 2024 | Kalvimalar - News

சி.யு.இ.டி., பி.ஜி., - 2024ஜனவரி 13,2024,11:01 IST

எழுத்தின் அளவு :

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்-போஸ்ட் கிரேஜுவேட்.



இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., நடத்தும் இத்தேர்வின் அடிப்படையில் நூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.




தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



தேர்வுமுறை: கணினி அடிப்படையிலான் இத்தேர்வில் மொத்தம் 100 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் இடம்பெறும். வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.



தேர்வு மையங்கள்: நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறும். 



தேர்வு கட்டணம்: 


பொதுப் பிரிவினர்: ரூ.1,200 


பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: ரூ.1,000 


எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர்: ரூ.900 


மாற்றுத்திறனாளிகள்: ரூ.800



விண்ணப்பிக்கும் முறை: pgcuet.samarth.ac.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆதார், கல்விச்சான்றிதழ்கள், புகைப்படம், முகவரிச்சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: pgcuet.samarth.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us