ஆஸ்திரேலியா | Kalvimalar - News

ஆஸ்திரேலியா

எழுத்தின் அளவு :

சிறந்த தகுதி வாய்ந்த பன்னாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளன. உலக அளவில்ஆஸ்திரேலிய பல்கலைக்கழக படிப்புகளுக்கு உள்ள அங்கீகாரம், கலாச்சார மாறுபாடுகளை உள்ளடக்கிய பல்கலை துறைகள், ஆஸ்திரேலியாவின் சிறப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியா சிறந்த படிப்புகளுக்கான சரணாலயமாக திகழ்கிறது. இதனால் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றில் புதுமையான கல்வி முறைகள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி வசதிகள் வழங்கப்படுவதால், இங்கு பயிலும் மாணவர்கள் எதிர்கால சமுதாய தேவைக்கேற்ற முக்கிய அங்கமாக உருவாகிறார்கள். இங்கு சிறப்பான கல்வி தரப்படவேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிக மானியங்களையும் பிற உதவிகளையும் அதிக அளவில் தருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கல்வியானது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் கல்விச் செலவை விட குறைவாகவே இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 37 பல்கலைக்கழகங்களுக்கு ஆஸ்தி ரேலிய அரசாலும் 2 பல்கலைக்கழகங் களுக்கு தனியாராலும் நிதியுதவி தரப்படு கிறது. சராசரியாக இவை ஒவ்வொன் றிலும் 3000 முதல் 50000 மாணவர்கள் படிக்கிறார்கள். பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், பி.எச்டி. போன்ற படிப்புகள் தரப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பைக் கூட இணைந்து ஒரே சமயத்தில் படிக்கும் வாய்ப்பும் உண்டு.
ஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களோடு கூடிய இணைந்து செயலாற்றும் உடன்பாடு, ஆய்வு நெறி முறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதனால் ஆய்வுத் துறைகளில் ஆஸ்திரேலியாவே முதன்மையாக விளங்குகிறது.
மரபியல், பயோடெக்னாலஜி, நானோ டெக்னாலஜி மற்றும் விளையாட்டு தொடர்பான துறைகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. விளையாட்டை அறிவியல் நோக்கில் அணுகுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக உலக சாம்பியனாக திகழ்கிறது. மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா துறைகளில் புதுமையான பல படிப்புகளை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சில முக்கிய படிப்புகளும் பல்கலைக் கழகங்களும்: சுற்றுச் சூழல் தொடர்பான படிப்புகள் சிலவற்றை ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் தருகின்றன. டாஸ்மேனியா பல்கலைகழகம் அண்டார்டிகா தொடர்பான ஆய்வுப் படிப்பைத் தருகிறது.

மெக்கொயர் பல்கலைகழகம் புரதப் பொருள் ஆய்வு மூலமாக கேன்சர் நோயை கட்டுப்படுத்தும் முறைகளை தந்திருக்கிறது. பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், உயிரி மூலக் கூறுகளின் மரபியல் போன்ற படிப்புகள் இந்த பல்கலைகழகத்தால் தரப்படுகிறது.
தெற்கு குவீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் தாவரங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவது தொடர்பான சிறப்புப் படிப்பை தருகிறது. இது போன்ற படிப்பை தரும் பல்கலைகழகம் ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வின்பர்ன் பல்கலைகழகம் வான் கோளவியல் சார்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் களை வடிவமைப்பதில் சிறந்து விளங்கு கிறது. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மில்லி செகண்ட் பல்சர்களை உருவாக்க இப் பல்கலைகழகம் பெரும்பங் காற்றியிருக்கிறது.
விக்டோரியா தொழில்கல்வி பல்கலைகழகம் தீ விபத்து மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் துறை படிப்புகளைத் தருகிறது. இப் பல்கலைகழகத்தின் பரிந்துரைப்படி உலகெங்கும் தற்போது தீ விபத்துகளிலிருந்து தப்ப உதவும் கட்டட மாடல்கள் உருவாக்கப்படுகின்றன.
தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைகழகம் இன்ஜினியர்கள் மற்றும் சயின்டிஸ்டு களுக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பைத் தருகிறது. தொழில் ரீதியான நிர்வாகப் படிப்புகளைத் தரும் சிறந்த பல்கலைக் கழகங்களில் பெரும் பாலானவை ஆஸ்திரேலியாவில் தான் உள்ளன.
ஆஸ்திரேலியாவின் பிற முக்கிய பல்கலைகழகங்கள் இவை தான்.

  • ஆஸ்திரேலியன் கிராஜூவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்
  • கிராஜூவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ் மெண்ட்
  • மொனாஸ் மௌண்ட் எலிசா பிசினஸ் ஸ்கூல்
  • மெல்பர்ன் பிசினஸ் ஸ்கூல்
  • ஆஸ்திரேலியன் நேசனல் யுனிவர்சிடி
  • யுனிவர்சிடி ஆப் கான்பரா
  • யுனிவர்சிடி ஆப் டாஸ்மானியா
  • யுனிவர்சிடி ஆப் ஒலகாங்
  • யுனிவர்சிடி ஆப் குவின்ஸ்லாந்து
நகரங்களிலிருந்து தொலைவில் உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் தொலை தூர கல்வியைத் தருகின்றன. இ லெர்னிங் மற்றும் ஆன்லைன் படிப்புகளிலும் ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் வெளிநாட்டு மாணவர்களும் சிறப்பான ஆன்லைன் கல்வியைப் பெற முடிகிறது.

ஆஸ்திரேலியாவில் மொத்தம் 55 பல்கலைகழகங்கள் எம்.பி.ஏ. படிப்பைத் தருகின்றன. 16 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் எம்.பி.ஏவை ஒருவர் நிறைவு செய்ய முடியும். 2 ஆண்டு படிக்க செலவு செய்ய முடியாதவர் 16 மாதங்களில் படிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. ஆஸ்திரேலிய பல்கலைகழகங்களுக்கிடையே உள்ள கேம்ப்ஸ் என்னும் ஏற்பாட்டின் படி பல்கலைகழகங்களுக்குள் ஒரு மாணவர் மாறிச் சென்று படிக்கும் வசதி தரப்படுகிறது.

ஆஸ்திரேலிய கல்விக் கட்டணம் பன்னாட்டு கட்டணங்களோடு ஒப்பிட்டால் குறைவு தான். இந்தியாவில் ஆஸ்திரேலிய கல்வி தகவல் மையங்கள்
ஐ.டி.பி. (I.D.P.) என்பது இந்திய மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி பயில உதவும் தனிப்பட்ட அமைப்பு. இது புதுடில்லி, சென்னை,மும்பை, சண்டிகார், பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஐதராபாத்தில் அலுவலகங்களை கொண்டிருக்கிறது. நமக்கு இது உதவுவது இவற்றில் தான்...
அனைத்து பல்கலைகழகங்கள் பற்றிய தகவல்கள், சேர்க்கை தேதிகள், சேர்க்கை முறைகள் உதவித் தொகை, வங்கிக் கடன்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பெறும் முறைகள் மாணவருக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம் செலுத்துவது தங்குமிடம் மற்றும் விமான பயணம் தொடர்பு கொள்ளும் இன்டர்நெட் முகவரி http://www.idp.com/india  இவற்றுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us