ஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.ஜூன் 30,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

வானூர்தி தொடர்புடைய இந்த படிப்புகள் பொதுவாக பறப்பது, விமான சேவைக் குழு, ஏர் டிராபிக் நிர்வாகம், விமான நுணுக்கங்கள், பயணிகள் பாதுகாப்பு, கட்டுப்பாட்டுக் கொள்கைகள், விமான நிலையம் தொடர்புடைய பொருளாதார அம்சங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை.

 

அரசு சார்ந்த விமானப் பணிகள், பறப்பது குறித்த கட்டுப்பாட்டு அமைப்புகள், ஏவியேஷன் கன்சல்டன்ட் போன்ற பணிகளைப் புரிய ஈடுபாடு காட்டுபவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஏவியேஷன் படிப்புகளைப் படிக்கலாம். உலகமயமாக்கல், தாராளமயம், தனியார் மயம் கொள்கைகளால் மாறிவரும் விமானத் துறையில் ஏவியேஷன் படித்தவருக்கு மிக அதிக அளவிலான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

ஏவியேஷன் படிப்புகள் பொதுவாக இவற்றைப் பற்றியே இருக்கின்றன.
* ஏர்லைன் வாடிக்கையாளர் பின்புல சேவைப் பணிகள்
* பயணிகளை அணுகும் முறை தொடர்பான பணி
* விமானப் பயணத் துறையின் அடிப்படைப் பணிகள்
* விமான நிர்வாகவியல்
* சரக்குகள் தொடர்புடைய நிர்வாகமும் மார்க்கெட்டிங்கும்
* எளிதில் வீணாகும் சரக்குகளை கையாளுதல்
* டிக்கெட் முன்பதிவு மற்றும் கேன்சலிங்
* விமானப் போக்குவரத்து நெறிப்படுத்துதல்
* வாடிக்கையாளருடன் நல்லுறவு
* சரக்குகள் முன்பதிவு
* வானிலும் நிலத்திலும் இயங்குதல் தொடர்புடைய அறிவுரைகளை தருவது
* விமானிகளுடைய அறை தொடர்புடைய நிர்வாகம்
* ஏரோடைனமிக்ஸ்
* நவீன நேவிகேஷன் முறைகளை கட்டுப்படுத்துவது
* மல்டி இன்ஜின் பிளைட் கட்டளைகள்
* விமானிகள் மற்றும் கிரவுண்ட் கன்ட்ரோல் ஒருங்கிணைப்பு
* பயண பாதுகாப்பு
* பொது ஏவியேஷன் நிர்வாகம்
* தட்பவெப்ப கண்காணிப்பு

இந்தியாவைப் பொறுத்த வரை கடந்த சில ஆண்டுகளாக இத் துறை படு வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியன், கிங்பிஷர், பிளைவெல் ஏவியேஷன், டெக்கான் ஏர்லைன்ஸ், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட், சாம் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், டிரான்ஸ் ஏசியன் ஏவியேஷன் போன்ற பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இத் துறை படிப்புகளைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் அதிகம்.

இவற்றில் ஏவியேஷன் இன்ஜினியரிங், ஏவியேஷன் மெயின்டனன்ஸ், ஏவியானிக்ஸ், ஏர்ஹோஸ்டஸ், சரக்கு நிர்வாகம் போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

 

வெளிநாடுகளிலும் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. சுகோய், லுப்தான்ஸா, டின் கார்ப் இன்டர்நேஷனல், லேண்ட் மார்க் ஏவியேஷன், ரிச்மோர் ஏவியேஷன் டீல் குரூப் போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிறுவனங்களிலும் விமான பராமரிப்பு, விமான பணியாளர்களை நிர்வகித்தல், தரக் கட்டுப்பாடு, சரக்கு நிர்வாகம், ஏவியேஷன் லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் பிரிவுகளில் பணி வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us