தமிழ் படிக்கலாம் | Kalvimalar - News

தமிழ் படிக்கலாம்

எழுத்தின் அளவு :

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கும் முதுநிலை தமிழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




வழங்கப்படும் படிப்புகள்:


* தமிழ் முதுநிலை பட்டப்படிப்பு - எம்.ஏ., தமிழ் 


சேர்க்கை இடங்கள்: 14



* ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலை பட்டப்படிப்பு - இன்டெக்ரேட்டர்டு எம்.ஏ., தமிழ்


சேர்க்கை இடங்கள்: 40



கல்வித் தகுதிகள்:


எம்.ஏ., தமிழ் படிப்பில் சேர்க்கை பெற, உயர்கல்வி துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றில் மொழிப் பாடமாக தமிழ் படித்திருப்பது அவசியம். தற்போது இறுதி ஆண்டு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும், ஒட்டுமொத்த தேர்ச்சி மதிப்பெண் பட்டியலின்படியே சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. 



ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் படிப்பில் சேர்க்கை பெற, பள்ளிக் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொழி பாடமாக தமிழ் படித்திருப்பது அவசியம். இப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணவர்கள் மூன்றாண்டு இறுதியில், விருப்பத்தின் அடிப்படையில் இளநிலை பட்டத்துடன் வெளியேறும் வாய்ப்பு உண்டு.



வயது வரம்பு:


எம்.ஏ., தமிழ் படிப்பில் சேர, 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர, 21 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.



விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 22



விபரங்களுக்கு: https://www.ulakaththamizh.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us