வரிவிதிப்பு துறை நிபுணர்களுக்கான தேவைகள் அதிகம் - நீங்கள் தயாரா? | Kalvimalar - News

வரிவிதிப்பு துறை நிபுணர்களுக்கான தேவைகள் அதிகம் - நீங்கள் தயாரா?

எழுத்தின் அளவு :

எம்.காம்., டேக்சேஷன் படிப்பை முடித்தவர்களுக்கு உலகம் முழுவதும் பணி வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன மற்றும் அவர்களுக்கான தேவைகள் எப்போதுமே குறைவதில்லை.

இப்படிப்பு எப்படி?

வரிவிதிப்புகள் தொடர்பான அனைத்து தலைப்புகள் மற்றும் பாடங்கள் மீது இப்படிப்பு கவனம் செலுத்துகிறது. மேலும், இப்படிப்பில், Income tax, sales tax, VAT, Service tax, property tax, tax laws and regulations போன்ற அனைத்துவித வரிகளைப் பற்றி விபரங்களும் அடக்கம். வரிவிதிப்பு துறை பற்றிய நடைமுறை உண்மை அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குகிறது இந்த செமஸ்டர் அடிப்படையிலான இரண்டு வருட படிப்பு.

இப்படிப்பு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான, சமகால வரிவிதிப்பு அம்சங்களைப் பற்றி அலசுகிறது. மேலும், வணிகத்தின் அடிப்படைகளைப் பற்றியதோடு மட்டுமல்லாமல், அதன் மேம்பட்ட துறைகளான மேலாண்மை, அட்வான்ஸ்டு அக்கவுன்டிங், பிசினஸ் என்வைரன்மென்ட், காஸ்ட் அனலிசிஸ் அன்ட் கன்ட்ரோல், கார்பரேட் லீகல் பிரேம்ஒர்க், அட்வான்ஸ் ஸ்டேடிஸ்டிகல் அனலிசிஸ், மேனேஜெரியல் எகனாமிக்ஸ், என்டர்பிரினியர்ஷிப் ஸ்கில் டெவலப்மென்ட், டைரக்ட் அன்ட் இன்டைரக்ட் டேக்ஸ் மற்றும் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் டேக்ஸ் ஆகியவற்றின் அம்சங்களையும் இப்படிப்பு விவரிக்கிறது.

இப்படிப்பிற்கான முழு கல்விக் கட்டணம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலானதாகும்.

மாணவர் சேர்க்கை நடைமுறை

இளநிலையில், வணிகப் படிப்பை முடித்திருப்பது கட்டாயம். பொதுவாக, இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் இளநிலையில், குறைந்தது 45% முதல் 50% மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. பொதுவாக, மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், சில பல்கலைகள், நேர்முகத் தேர்வையும் நடத்துகின்றன.

இப்படிப்பின் நன்மைகள்

மாணவர்களுக்கான பலவித வாய்ப்புகளை இப்படிப்பு திறந்து விடுகிறது. இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவோர், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளையும் மேற்கொள்ளலாம். இத்துறை மிகவும் பரந்துவிரிந்த ஒன்று என்பதால், ஒருவர் தனக்கு பிடித்தமான ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

வேலை, சம்பளம், வளர்ச்சி

இப்படிப்பை முடித்தப்பிறகு, customs, state sales tax laws, import / export firms, excise department ஆகியவற்றில் பணிபுரியலாம். KPMG, Ernst & Young, PricewaterhouseCoopers, Deloitte போன்ற சட்ட மையங்கள், ஏறக்குறைய 60% வரிவிதிப்பு(taxation) நிபுணர்களை பணிக்கு அமர்த்துகின்றன.

ஒரு பெரிய கன்சல்டிங் நிறுவனத்தில், டேக்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் திட்டமிடுதலில், பட்டம் பெற்ற ஒருவருக்கு, ஆரம்ப நிலையிலேயே, ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதேசமயம், புதிதாக படித்து வெளிவருபவருக்கு ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

பொறுப்புக்குத் தகுந்தபடிதான் சம்பளம் இருக்கும் என்றாலும், சில நாடுகளில், சில நிறுவனங்கள், ஆரம்ப நிலையிலேயே ஆண்டிற்கு ரூ.10 லட்சம் வரை தருகின்றன. இத்துறை சார்ந்த ஒரு நடுநிலையிலான நிபுணருக்கு ஆண்டிற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கிடைக்கிறது.

நடுநிலையிலான நிபுணர் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரையான அனுபவமும், ஒரு சீனியர் நிபுணர் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வரையிலான அனுபவமும் பெற்றிருப்பார். சில பெரிய நிறுவனங்கள், சர்வதேச டெபுடேஷன் வாய்ப்புகள் மற்றும் பல்வேறான துறைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஆகியவற்றை அளிக்கின்றன.

வரி வகைப்பாடுகள்

டேக்ஸ் நிபுணர்களுக்கு, இரண்டு விதமான தேவைப்பாடுகள் உள்ளன. உள்ளூர் தேவைகள் மற்றும் சர்வதேச தேவைகள் என்பவையே அவை. ஒரு நல்ல டேக்ஸ் நிபுணருக்கான பற்றாக்குறை மற்றும் உலகெங்கிலும் தற்போது அதிகரித்துவரும் டேக்ஸ் நடைமுறை சிக்கல்கள் போன்றவை, இத்துறை நிபுணர்களின் சம்பளத்தை பெருமளவில் அதிகரிக்க காரணமாய் அமைந்துள்ளன.

சமீப காலங்களில், இவர்களுக்கான சம்பளம் மிகவும் அதிகரித்து வருகிறது. நேரடி டேக்ஸ் நிபுணர்களைக்(Indirect tax professionals) காட்டிலும், மறைமுக டேக்ஸ் நிபுணர்களுக்கான(Direct tax professionals) தேவை அதிகளவில் உள்ளது. ஆனால், நிபுணர்கள் குறைவான அளவிலேயே உள்ளனர். Customs and Excise போன்ற துறைகளில் இந்த Indirect tax professionals சம்பந்தப்பட்டுள்ளனர்.

நிபுணர்களுக்கான தேவை

கடந்த 4 ஆண்டுகளாக, சர்வதேச சட்டங்களில் பரிச்சயம் பெற்ற டேக்ஸ் நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தேவைக்கும், நிபுணர்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே வருவதால், இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயத்தில், வெறும் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது. இத்துறையில் சிறந்த விளங்க தேவையான அனைத்து திறன்களையும் சிறப்பான முறையில் வளர்த்துக் கொள்வது முக்கியம்.

தொடர்புடைய படிப்புகள்

Master of Commerce - Advanced taxation and accounting
Master of Commerce - Cost accounting and taxation
Master of Commerce - Accounts and taxation

Core Subjects

Advace accounting
Cost analysis & control
Corporate legal framework
Advance statistical analysis
Managerial economics
Accounting for managerial decisions
Direct tax. Indirect tax
Sales & service tax

இப்படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

AISECT University, Bhopal
Jiwaji university, Gwalior
IIS university, Jaipur
MS university, Baroda.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us