ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சன்ஸ்தான் | Kalvimalar - News

ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சன்ஸ்தான்

எழுத்தின் அளவு :

சமஸ்கிருதத்தை நம் நாட்டினரும், அயல் நாட்டினரும் சுலபமாக படிக்க வேண்டும் என்பதை குறிகோளாகக் கொண்டு சனஸ்தான் 1973 ம் ஆண்டு ஆங்கில மொழியில் அஞ்சல்வழி கல்வியை தொடங்கியது. 1974 ம் ஆண்டு முதல் இந்தி மொழியிலும் படிப்பை வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இப்படிப்பு வழங்கப்படுகிறது. மொத்தம் 20 பாடங்கள், மாதம் இரண்டு பாடங்கள் மாணவர்களுக்கு அஞ்சல் முறையில் அனுப்பிவைக்கப்படும்.

முதல் வருட படிப்பை படிக்க இந்தி அல்லது ஆங்கில மொழியில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் வருட படிப்பை படிக்க மாணவர்கள் முதல் வருட அறிமுக படிப்பை முடித்திருக்கு வேண்டும் அல்லது சம்ஸ்கிருத பாடத்தில் எலிமென்டரி அளவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு வருட படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்படிப்பில் வழங்கப்படும் பாடங்கள் கிராம்மர், டெக்ஸ்ட், கிலாசரி , கிரம்மடிக்கள் நோட்பேட் , மற்றும் ரெஸ்பான்ஸ் சீட் என ஐந்து வகையாக பிரிக்கப்படும்.

வழங்கப்படும் படிப்புகள் :
சமஸ்கிருதம்

தொடர்பு கொள்ள:
ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சன்ஸ்தான்
56-57 , இன்ஸ்டிடி யூஷனல் ஏரியா, ஜனகபுரி
புது டெல்லி 110 058
இமெயில்: rsks@nda.vsnl.net.in
வெப்சைட்: http://www.sanskrit.nic.in/index.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us