எழுத்தின் அளவு :

அடிப்படைத் தகுதிகள்:

வயது: யு.ஜி.சி.,/ யு.ஜி.சி., - சி.எஸ்.ஐ.ஆர்., தேசிய திறனறி தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

வயது தளர்வு: பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., / ஓ.பி.சி.,/ பி.எச்., ஆகியோருக்கும், எல்.எல்.எம்., பட்டம் பெற்றோருக்கும், ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: முதுகலைப் படிப்பில், குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

தகுதித் தேர்வுகள்: யு.ஜி.சி., / யு.ஜி.சி., - சி.எஸ்.ஐ.ஆர்., நெட்.

பிற தகுதிகள்: எம்.பில்., பி.எச்.டி., ஆய்வுக்கு பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது, நெட்/யு.ஜி.சி., - சி.எஸ்.ஐ.ஆர்., தேர்வு முடிவுகள் வெளியான ஓராண்டுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பெலோஷிப் விவரங்கள்:

காலம்: 2 ஆண்டுகள் + 3 ஆண்டுகள் அல்லது பி.எச்.டி., ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் வரையிலான காலம்.

பாதுகாவலர்கள்/ படிப்பு உதவி: மாதம் ரூ.1,000 (உடல் ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கு)

வீட்டு வாடகைப் படி: ஒருவர் தங்கும் அறை அல்லது பல்கலை/ நிறுவன சட்டத்திற்கு உட்பட்ட வீட்டு வாடகைப் படி அல்லது நகரங்களுக்கு ஏற்றவாறு அரசு நிர்ணயித்துள்ள வீட்டு வாடகைப் படி.

துறை ரீதியான உதவி: கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்கும், மாணவர் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு ரூ.3,000.

நிதி பட்டுவாடா: எம்.பில்., / பி.எச்.டி.,க்காக பதிவு செய்துள்ள நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

தேர்ச்சி கண்காணிப்பு: கண்காணிப்பாளர்/ வழிகாட்டி, மாணவரின் தேர்ச்சியைக் கண்காணிப்பர். யு.ஜி.சி., அலுவலகத்திற்கு பல்கலை அளிக்க வேண்டிய ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் இது சேர்க்கப்படும்.

அறிவிப்பு வெளியீடு மற்றும் கடைசி தேதி: யு.ஜி.சி., சட்டம், செக்ஷன் 2 (எப்) மற்றும் 12 (பி) பிரிவுகளின் படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களால் அவ்வப்போது அறிவிப்பு வெளியாகும்.

Scholarship :  ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்புகள்
Course : 
Provider Address :  University Grants Commission, Bahadrshah Zafar Marg, New Delhi - 110 002. Tel: 011 - 23233486. Fax: 011 - 23236288 www.ugc.ac.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us