எழுத்தின் அளவு :

ஏ-ஸ்டார் இந்தியா மற்றும் எஸ்.ஐ.ஏ., யூத் ஸ்காலர்ஷிப் என்று அழைக்கப்படும் இந்த ஸ்காலர்ஷிப்கள் மூலம் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சிங்கப்பூரில் கல்வி பெறும் அரிய வாய்ப்பு காத்துள்ளது.
 
‘ஏ-ஸ்டார்’ இந்தியா யூத் ஸ்காலர்ஷிப் சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் எஜுகேஷன் ‘அட்வான்ஸ்டு’ (ஜி.சி.இ., ‘ஏ’) லெவல் பள்ளிச் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் படி நான்கு ஆண்டுகள் சிங்கப்பூரில் தங்கியிருந்து உயர்நிலை வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழக முன் படிப்புகளை முடிக்கலாம்.
 
ஒவ்வொரு ஆண்டும் மாணவரின் தகுதித் திறன் பரிசீலிக்கப்பட்டுத்தான் அடுத்தாண்டு படிப்பு தொடர அனுமதிக்கப்படும் என்பதால், கல்வி கற்க செல்லும் மாணவர்கள் தொடர்ந்து நன்றாக படிக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது.
 
தகுதிகள்
* இந்தியராக இருக்க வேண்டும்.
* ஆங்கிலத்தை முதல் பாடமாக படித்திருக்க வேண்டும். சராசரி மதிப்பெண் 80 சதவீதம் இருக்க வேண்டும்.
* ஆங்கிலத்தில் பேசுதல் மற்றும் எழுதுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.
 
தேர்வு மற்றும் இன்டர்வியூ: பெங்களூரு, சென்னை, டில்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும்.

முதல் இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம் உதவித் தொகையும் அடுத்த இரு ஆண்டுகளில் மாதம் சுமார் ரூ.76 ஆயிரத்துக்கும் கிடைக்கும். விமான டிக்கெட் இலவசம். பள்ளி கட்டணத்தில் தள்ளுபடி உண்டு. இந்த ஸ்காலர்ஷிப் சிங்கப்பூர் அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது. படிக்கும் மாணவர்கள் பாண்ட் ஏதும் எழுதி தர வேண்டியது இல்லை.
 
கூடுதல் விபரங்களுக்கு:  www.moe.gov.sg

Scholarship :  சிங்கப்பூர் பள்ளிகளில் படிக்க உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us