எழுத்தின் அளவு :

சாம்சங் நிறுவனம் கொரியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. நுகர்பொருள் துறையில் உலகப்புகழ் வாய்ந்த சாம்சங் நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு சர்வதேச ஸ்காலர்ஷிப் திட்டம் (ஜி.எஸ்.பி) ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்காலர்ஷிப் பெறும் இந்திய மாணவர்கள் இதன்மூலம் கொரியாவில் எம்.எஸ்., எம்.பி.பி., போன்ற படிப்புகளைப் படிக்க முடிவதுடன், சில
மாணவர்கள் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்சில் பணிபுரியும் வாய்ப்புகளும் தோன்றியுள்ளது.

இன்ஜினியரிங் பிரிவு முடித்து ஸ்காலர்ஷிப்பில் எம்.எஸ்.பயிலத் தகுதிபெறும் மாணவர்கள் சியோல் தேசியப் பல்கலைக்கழகத்தில் முற்றிலும் இலவசமாக இனி படிக்கலாம். எம்.பி.ஏ.,வில் சேரத்தகுதி பெறும் மாணவர்களுக்கு கொரியாவிலுள்ள சுங் கியூன் க்வான் பல்கலைக்கழகத்தில் பயில சாம்சங் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தப் படிப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் தலா 4 மாணவர்களைத் தேர்வு செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது.

இவர்களில் குறிப்பிட்ட தகுதியுள்ள  சில மாணவர்களுக்கு முழுமையான ஸ்காலர்ஷிப் மாதந்தோறும் தேவைப்படும் வாழ்வாதாரச் செலவுகள், சாம்சங் நிறுவனத்தில் கோடை/குளிர் கால இன்டர்ன்ஷிப் பயிற்சி, பட்டம் முடித்தபின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலேயே பணி வாய்ப்பு போன்றவற்றைத் தரவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் உலகத்திற்கு தேவைப்படும் வல்லுநர்களை உருவாக்குவதை சியோல் தேசியப் பல்கலைக்கழகம் இலட்சியமாக கொண்டு இயங்குகிறது. இத்துறைகளில் இந்தியர்களின் திறமையை நன்கு உணர்ந்த சாம்சங் நிறுவனம், அதனை ஊக்குவிக்கும் விதத்தில் இந்தஸ்காலர்ஷிப்களைத் தர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

நல்ல திறமையாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் உலகளாவிய 20 ஸ்காலர்ஷிப்களில் 8ஐ இந்தியாவைச் சார்ந்த மாணவர்கள் பெறுவது சாத்தியமாகும். இதே மாதிரியான ஸ்காலர்ஷிப்பை சாம்சங் நிறுவனம் இந்தியா தவிர சீனா, ரஷ்யா, பிரேசில், ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான சுங் க்யூன் க்வான் பல்கலைக்கழகம் 2000 ஆண்டு முதல் இயங்கி வருவதும், இதுவரை அங்கு 14 மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெற்று இணைந்துள்ளனர் என்பதும் செய்தியாகும். இன்ஜினியரிங் பிரிவுக்கான ஸ்காலர்ஷிப்கள் 2004 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இதுவரை 13 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Scholarship :  சாம்சங் நிறுவனம் வழங்கும் சர்வதேச உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us