எழுத்தின் அளவு :

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முழு நேர முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் இந்திய மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். எந்த பாடப்பிரிவில் படித்தாலும் இந்த உதவித் தொகையைப் பெற தகுதியுடையவராவர். ஓராண்டிற்கு ரூ.1,30,000 அளவிற்கு இந்த கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

எடின்பர்க்கில் கல்வி பயிலும் மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பூர்த்தி செய்யலாம்.

இந்திய மாணவர்கள் 15 பேருக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்து உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் தகவல்களுக்கு www.ed.ac.uk இணையதளத்தை காணவும்.

Scholarship :  யு.கே.யில் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address :  The University of Edinburgh
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us