எழுத்தின் அளவு :

இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, புதுச்சேரி அரசும், புதுச்சேரி பல்கலைக்கழகமும் இணைந்து கல்வி உதவித் தொகை அளிக்கிறது.

ஒவ்வொரு இளநிலை பட்டப்படிப்பிலும் 20 விழுக்காடு மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவார்கள்.

இந்த உதவித் தொகையைப் பெறும் மாணவரது பெற்றோருக்கு வருடத்திற்கு ரூ.30,000க்கு மேல் வருமானம் இருக்கக் கூடாது.

மாணவரது கல்வித் திறனும், பெற்றோரின் ஆண்டு வருமானமும் இந்த உதவித் தொகையைப் பெற தகுதியாக வைக்கப்படுகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் போது இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.pondiuni.edu.in

Scholarship :  புதுச்சேரி பல்கலையின் கல்வி உதவித்தொகை
Course : 
Provider Address :  Pondicherry University
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us