எழுத்தின் அளவு :

உடல் ஊனமுற்ற இளைஞர்கள் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயில உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேற்படிப்பு படிக்க உடல் ஊனமுற்ற இந்தியர் எவரும் இந்த உதவித் தொகையைப் பெறத் தகுதிவாய்ந்தவர் ஆவார்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில், பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள், குறைந்தது 2 ஆண்டுகள் கொண்ட மேல்படிப்பு படிக்க இந்த உதவித் தொகை வழங்கப்படும். ஓராண்டிற்கு குறைவான படிப்புகளுக்கு கிடையாது. கல்விக் கட்டணம் செலுத்தியிருப்பின், ரூ.10,000 வரை மாணவர்களிடம் திரும்ப செலுத்தப்படும்.

இரண்டாவது ஆண்டுக்கும் உதவித் தொகை தொடர, மாணவர்கள் முதல் ஆண்டில் பெறும் தேர்ச்சி விகிதம் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.

வேறு எந்த உதவித்தொகையும் பெறாத மாணவராகவும் இருக்க வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவராக இருப்பின், மாதந்தோறும் ரூ.1000மும், வீட்டிலிருந்து வந்து செல்லும் மாணவராக இருப்பின் ரூ.700ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.nhfdc.nic.in

Scholarship :  உடல் ஊனமுற்றோருக்கு உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us