எழுத்தின் அளவு :

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பில் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

மதர் எம்.செலின் கல்வி உதவித் தொகை

மதர் எம்.செலின் கல்வி அறக்கட்டளையின் சார்பில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.400 உதவித் தொகையாக வழங்கப்படும்.

சர் தஞ்சாவூர் மாதவ ராவ் உதவித்தொகை

சர் தஞ்சாவூர் மாதவ ராவ் அறக்கட்டளையின் சார்பில் முதலாமாண்டு பயிலும் இரண்டு இந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.700 உதவித் தொகையாக வழங்கப்படும்.

மெட்ராஸ் ஓரியண்டல் கான்பிரன்ஸ் உதவித்தொகை

இந்த உதவிதொகையானது சென்னை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ஒரு மாணவரை தேர்வு செய்து ஆண்டிற்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.

டாக்டர். . எல் முதலியார் உதவித்தொகை

டாக்டர். . எல் முதலியார் அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கவிஞர் எச். கிருஷ்ண பிள்ளை தமிழ் உதவித்தொகை

கவிஞர் எச். கிருஷ்ண பிள்ளை அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

லார்ட் பெண்ட்லேன்ட் முசல்மான் உதவித்தொகை

லார்ட் பெண்ட்லேன்ட் முசல்மான் அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் என்டவுன்மென்ட்

லயன்ஸ் கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல் என்டவுன்மென்ட் பி.., வரலாறு முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்குகிறது.

கிருபா பாய் சத்தியநாதன் மெமோரியல் உதவித்தொகை

கிருபா பாய் சத்தியநாதன் மெமோரியல் அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

ஜான்ஸ்டன் ஆப் கார்ன்ஸ்லோச் என்டவுன்மென்ட்

ஜான்ஸ்டன் ஆப் கார்ன்ஸ்லோச் என்டவுன்மென்ட் சார்பில் முதலாமாண்டு கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கவர்னர் என்டவுமென்ட் உதவித்தொகை

கவர்னர் என்டவுமென்ட் சார்பில் மூன்று மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பி.ஏ., முதலாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கும், பி.எஸ்சி., முதலாமாண்டு பயிலும் இரண்டு மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பலராம ஐயர் என்டவுன்மென்ட்

பலராம ஐயர் என்டவுன்மென்ட் சார்பில் பி.எஸ்சி., கணிதம் பயிலும் 1 மாணவி தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

தி கோஸ்சென் மெமோரியல் என்டவுன்மென்ட்

தி கோஸ்சென் மெமோரியல் என்டவுன்மென்ட் சார்பில் பி.ஏ., பொருளாதாரம் முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

ஹெமிங்வே மெமோரியல் என்டவுன்மென்ட்

ஹெமிங்வே மெமோரியல் என்டவுன்மென்ட் சார்பில் பி.ஏ., பொருளாதாரம் பயிலும் 1 மாணவருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

கோஸ்சென் மெமோரியல் என்டவுன்மென்ட்

கோஸ்சென் மெமோரியல் என்டவுன்மென்ட் சார்பில் பி.ஏ., பொருளாதாரம் முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

கே.வி ராமமூர்த்தி மற்றும் சுப்பலக்ஷ்மி உதவித்தொகை

கே.வி ராமமூர்த்தி மற்றும் சுப்பலக்ஷ்மி அறக்கட்டளையின் சார்பில் பி.ஏ / பி.எஸ்சி இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தை காணவும்.

Scholarship :  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us