எழுத்தின் அளவு :

உயர்கல்விக்காக உதவித்தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இதைவிட சிறந்த வாய்ப்புக் கிடைக்காது. வேறெந்த உதவித்தொகையும் இந்த அளவுக்கு செலவினங்களை உள்ளடக்கி இருக்குமா என்பதும் சந்தேகமே. சுருக்கமாகச் சொல்வதானால், எழுதும் பென்சிலில் இருந்து, உடுத்தும் ஆடை வரை; திருமணமாகி குழந்தைகள் இருப்பின் அவர்களின் செலவினத்தையும் உள்ளடக்கிய உதவித்தொகை காமன்வெல்த் உதவித்தொகையாக மட்டுமே இருக்கும்.

துறைகள்

கேன்சர் தொடர்பான மருத்துவப்பயிற்சி மற்றும் ஆறுமாத ஆய்வு, இதயம், மகப்பேறு, மருந்தியல், பல்மருத்துவம், எலும்புமூட்டு, நரம்பியல், காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள்; பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல், அறிவியல், வேளாண்மை, மானுடவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மற்றும் உயர்கல்வி மேற்கொள்ளலாம்.

கல்வித்தகுதி

முதுநிலை படிப்பில் சேர இளநிலைப்பட்டம் நிறைவு செய்திருக்க வேண்டும். மானுடவியலில் குறைந்தது முதல் வகுப்பிலும்; மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பத்தில் 65 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.

பிஎச்.டி.,க்கு முதுநிலை வகுப்பில் மேற்கூறிய அளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதுகுறித்த விவரங்களை http://bit.ly/cscuk-apply என்ற இணைய முகவரியில் பெறலாம். ஆங்கில மீடியத்தில் தங்கள் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகையின் விவரம்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் தேர்வுக்கட்டணம், விமானக்கட்டணம், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதன்முறை வருகை, ஆய்வுக்கட்டுரை, உடைகள், பயணப்படி; திருமணமானவராக இருப்பின் மாதம் 220 யூரோ; கள ஆய்வுக்கு சென்றால் அதற்கான செலவுத்தொகை வழங்கப்படும். மொத்தம் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு www.education.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Scholarship :  காமன்வெல்த் கல்வி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us