எழுத்தின் அளவு :

பீஜிங்: சீன அரசாங்கம் வழங்கும் இந்த உதவித்தொகை திட்டமானது சீனாவுக்கும், பிற நாட்டு அரசாங்கங்கள், பிற நாட்டு அமைப்புகள், பிற நாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையிலான கல்வி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சர்வதேச மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்குமானதாகும்.

உதவித்தொகை பெயர் - சீன அரசாங்க உதவித்தொகை

உதவித்தொகை அமைப்பாளர் - சீன கல்வி அமைச்சகம்

ஆய்வு செய்யக்கூடிய துறைகள்

* சீன மொழி மற்றும் இலக்கியம்
* வர்த்தக மேலாண்மை
* செடி வளர்ப்பு மற்றும் ஜெனடிக்ஸ்
* சுற்றுசூழல் அறிவியல்
* கவின் கலை
* பயிர்களுக்கும், சூழலுக்கும் இடையேயான தொடர்பை ஆராயும்  துறை
* பட்டுப்பூச்சி வளர்ப்பு
* தாவரவியல்

ஆகிய துறைகளில், உயர்கல்வி, ஆராய்ச்சி, சிறப்பு பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை மதிப்பு

அனைத்து மேம்பட்ட சீனியர் மாணவர்களுக்கும் மாதம் 2000 யுவான்களை சீன அரசு வழங்குகிறது. சாதாரண நிலையிலான பட்டதாரி மாணவர்களுக்கு மாதம் 1400 யுவான்கள். இளநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கு மாதம் 1100 யுவான்கள்.

மேலும், இந்திய அரசாங்கம், ஒரு மாதத்திற்கு 1170 யுவான் என்ற மதிப்பில் துணைநிலை உதவித்தொகையை வழங்குகிறது. சீன அரசாங்கம், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி மற்றும் டியூஷன் கட்டணம் உள்ளிட்ட பலவற்றை வழங்குகிறது.

தகுதிகள்

* சீன மொழி மற்றும் இலக்கியம் - சீன மொழியில் 1 அல்லது 2 வருட பழக்கம்(அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சான்றிதழ், பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்றிருத்தல்)

* கவின்கலைத் துறை(பெயின்டிங் மற்றும் சிற்பம்) - குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்(மொத்தமாக), கவின்கலைத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* பிற பாடங்கள் - குறைந்தது 60% மதிப்பெண்களுடன், முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஒரு வருடம், சீன மொழி படிப்பை, தங்களுக்கு விருப்பமான துறைக்குள் ஆராய்ச்சியை துவங்கும் முன்பாக மேற்கொள்ள வேண்டும்.

வயது

40 வருடங்களுக்குள் இருக்க வேண்டும்

விலாசம்
China scholarship Council
Level 13,
Building A3 No.9
Chegongzhuang Avenue Beijing
P.R.C  

இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் பிற அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள  http://en.csc.edu.cn/ என்ற இணையதளம் செல்க.

Scholarship :  சீன அரசு வழங்கும் ஆராய்ச்சி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us