இயலாத நிலையிலுள்ள பெண்களுக்கு அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய வகையில் இந்த சான்றிதழ் கல்வி அமைந்துள்ளது. அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் இணைந்து இதற்கான பாடத்திட்டமும், பயிற்சியும் வழங்கப்படுகிறது. பயிற்சியானது தேசிய மற்றும் உலகளாவிய வகையில் இருப்பதால் பன்முக ஊடகங்களின் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தகுதி: 10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லது 10/+2 தவறிய, ஏதாவது ஒரு முன்னேற்றத்திற்கான துறையில் மூன்று வருட வேலை பார்த்தவர்கள்.