தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நாடுகளில் பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களை இந்தப் படிப்பு தருகிறது. பல்வேறு நில தொழில் நுட்பம் மற்றும் தொடர்பியல் முறைகளை மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளுடன் கற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நாடுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறியக் கூடிய வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம், சுற்றுச் சூழல், கலாசாரம், அரசியல் போன்றவை பயணம் மற்றும் சுற்றுலாவியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், டிராவல்ஸ் நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.