மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (17)

எழுத்தின் அளவு :

தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்.


எதை வெற்றிகரமான சாதனையாக கருதமுடியும்?
- எஸ்.சிவா, தங்கவேலு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை
இது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பிறரால் சாதிக்க முடியாத ஏதேனும் ஒன்றை, சாதித்துக்காட்டி ஜெயித்தால், நீங்களும் சாதனையாளரே.


உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளதா?
- எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி, மாமண்டூர்
விடாமுயற்சியுடனான, கடின உழைப்பும், வியர்வையுமே வெற்றியை பெற்றுத்தரும்.


இளைய தலைமுறைக்கு உங்களது அறிவுரை?
அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர்
படிப்பில் சாதியுங்கள். அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் இலக்கை தீர்மானியுங்கள். அந்த இலக்கை நீங்கள் அடைய முயற்சிக்கும் போது, கண்டிப்பாக சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பிரச்னைகள் உங்களை வீழ்த்திவிடக்கூடாது. நீங்கள் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்துங்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றக் கூடிய அறிவான குடிமக்களாக நீங்கள் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us