ஜவஹர்லால் நேரு பல்கலையில் களைகட்டியது தேர்தல் பிரசாரம் | Kalvimalar - News

ஜவஹர்லால் நேரு பல்கலையில் களைகட்டியது தேர்தல் பிரசாரம்மார்ச் 21,2024,09:03 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் கடந்த 2019ல் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரொனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.


அதேபோல, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் பல்வேறு காரணங்களால் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின், மாணவர் சங்கத் தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, 24-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.


மாணவர் சங்கத் தேர்தலை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகம் களைகட்டியுள்ளது. அந்தப் பகுதி முழுதும் சுவர்களில் வண்ணமயமான போஸ்டர்கள் நிரம்பி வழிகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், குறிப்பாக முதன்முறையாக ஓட்டுப்போட இருக்கும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உலா வருகின்றனர்.


வாக்காளர்களை கவரும் வகையில், மாணவர் அமைப்புகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பல்கலை கேன்டீன்களிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பல்கலைஅருகேயுள்ள தாபாக்களிலும் மாணவர் கூட்டம் நிரம்பி வழிகிறது.


சபர்மதி தாபா உரிமையாளர் துருவ் குமார், பல்கலையின் மாணவர் சங்கத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு பின் நடப்பதால், மாணவர்களிடன் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தினமும் பிரசாரம் முடிந்த பின், மாணவர்கள் தாபாவில் கூடுகின்றனர்.அதனால் வியாபாரம் அமோகமாக உள்ளது என்றார்.


அனைத்திந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய மாணவர்கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரி கூட்டணி மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்ஆகியவை இடையேகடும் போட்டி நிலவுகிறது.


ஐக்கிய இடதுசாரி கூட்டணி சார்பில், மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தனஞ்செய், ஜவஹர்லால்நேரு பல்கலையில் இடதுசாரிகளுக்கு என ஒரு பாரம்பரியம் உள்ளது. மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம்.


பல்கலை வளாகத்தில் மாணவியரின் பாதுகாப்பு, கல்விக் கட்டண உயர்வு, கல்வி உதவித்தொகை குறைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சனை என எதுவாக இருந்தாலும், இடதுசாரிகள் போராடி அவற்றை நிவர்த்திசெய்கின்றனர்.


அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் மாணவர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் உமேஷ் சந்திர அஜ்மீரா, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் இடதுசாரிகளின் சர்வாதிகாரம் நீண்ட காலமாக நிலவுகிறது.


அவர்கள் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாமல், கல்வி நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். இடதுசாரிகளின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மாணவர்களுக்காக நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம், என்றார்.


காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த இந்திய தேசிய மாணவர் சங்கம், பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கம் மற்றும் சமாஜ்வாதி சத்ர சங்கதன் ஆகிய மாணவர் அமைப்புகளும் இந்தத் தேர்தலில் களம் இறங்கியுள்ளன.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us