நிரஞ்சனா (பிளஸ் 2 மாவட்ட அளவில் 2ம் இடம்) - 2010 | Kalvimalar - News

நிரஞ்சனா (பிளஸ் 2 மாவட்ட அளவில் 2ம் இடம்) - 2010

எழுத்தின் அளவு :

கோவில் அர்ச்சகரின் மகள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவர் சி.ஏ., படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிரஞ்சனா, 1142 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் விபரம்: தமிழ்: 184, ஆங்கிலம்: 164, வணிகவியல்:198, செய்முறை: 200, ஆடிட்டிங் தியரி: 196

நிரஞ்சனா கூறுகையில், பள்ளியில் காலையிலும் மாலையிலும் ஆசிரியர்கள் நடத்திய சிறப்பு வகுப்புகள் அதிக மதிப்பெண் பெற உதவின. தேர்வு நாட்களில் அதிகாலை 4.00 மணிக்கே எழுந்து படித்தால் பாடங்கள் மனதில் தங்கின. அனைத்து பாடங்களையும் புரிந்து படித்தேன். அடுத்தபடியாக சார்ட்டர்டு அக்கவுண்டன்டு (சி.ஏ) படிக்க விருப்பம், என்றார். சிறப்பு வகுப்புகள் அதிக மார்க் வாங்க காரணம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us