நிவேதா (நர்சிங் பாடத்தில் மாநில மூன்றாமிடம்) - 2011 | Kalvimalar - News

நிவேதா (நர்சிங் பாடத்தில் மாநில மூன்றாமிடம்) - 2011

எழுத்தின் அளவு :

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிளஸ் 2வில் நர்சிங் பாடத்தில் 193 மதிப்பெண்கள் பெற்று மாநில மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மொத்த மதிப்பெண்கள் 946.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நிவேதா, இப்பள்ளி விடுதியில் தங்கிபடித்தார். தந்தை ரமேஷ், டிரைவர். தாயார் விஜயலட்சுமி, மில்தொழிலாளி. நிவேதா கூறும்போது, பாடத்தை எழுதிப்படித்ததால் எனக்கு மாநில ரேங்க் கிடைத்தது. அதிகாலையை விட நள்ளிரவில் நீண்ட நேரம் கண்விழித்து படித்தேன்.

பாடத்தின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையும் வெறுத்து ஒதுக்கவில்லை. பள்ளி, விடுதியில் என் படிப்புக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்தது. அருப்புக்கோட்டையில் என் வீட்டில் டிவி கிடையாது. அதனால் விடுமுறை நாட்களில் விடுதியில் இருந்து வீட்டிற்கு சென்றாலும், கவனத்தை சிதறவிடாமல் படித்தேன். பி.எஸ்ஸி., நர்சிங் படிக்கவுள்ளேன், என்றார். இப்பள்ளி மாணவியர் கடந்த நான்கு ஆண்டாக பிளஸ் 2வில் நர்சிங் பாடத்தில் மாநில ரேங்க் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us