அமெரிக்க விசா எளிது | Kalvimalar - News

அமெரிக்க விசா எளிதுமே 11,2019,00:00 IST

எழுத்தின் அளவு :

சிறப்பான உயர் கல்வியை பெற விரும்பும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா ஆவலோடு வரவேற்கிறது. தற்போது 10 லட்சம் அயல்நாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்துவரும் நிலையில் அவர்களில், 2 லட்சம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



மாணவர் விசா தினம்:


இந்தாண்டு அமெரிக்காவில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்தியாவில் உள்ள 5 அமெரிக்க துணைத் தூதரகங்களிலும் ஜூன் 12ம் தேதி, மாணவர் விசா நாளாக அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் கொண்டாட உள்ளன. ஆண்டின் அனைத்து நாட்களிலும் மாணவர் விசாவிற்காக, விண்ணப்பம் பெறப்படுகின்ற போதிலும், விசா நாளன்று மட்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பிரத்யேகமாக நேர்முகத் தேர்வு நடத்தி விசா வழங்க திட்டமிட்டுள்ளோம். 



மாணவர்களுக்கான அமெரிக்க விசா பெறும் வழிமுறைகள்:




விண்ணப்பப் பதிவு:


* பொதுவாக, அமெரிக்க விசா பெற விரும்பும் மாணவர்கள், ceac.state.gov/genniv/ எனும் அதிகாரப்பூர்வ இணையத்தில், டி.எஸ்.-160 விண்ணப்பத்தை சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.


*  எஸ்.இ.வி.ஐ.எஸ்., எனும் ஸ்டூடண்ட் அண்ட் எக்ஸ்சேஜ் விசிட்டர் புரொகிராம் கட்டணத்தை www.fmjfee.com எனும் இணையதளத்தில் ஆன்லைனில் வாயிலாக செலுத்த வேண்டும்.


* பிறகு, www.ustraveldocs.com/in எனும் இணையதளத்தில் பயனாளர் கணக்கை துவக்க வேண்டும்.



விசா கட்டணம் செலுத்துதல்:


* விசா கட்டணத்தை மொபைல் போன் வாயிலாகவோ, 


* எலக்ட்ரானிக் நிதி பரிமாற்ற முறையிலோ,


*அல்லது தொகையாக ஆக்சிஸ் / சிட்டி வங்கிகளில் செலுத்தலாம்.



இரண்டுவிதமான அனுமதியை பெறுதல்:


* அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விசா நேர்முகத்தேர்விற்கான அனுமதியை ஆன்லைன் வாயிலாக விண்ணபித்து பெற வேண்டும்.


* விசாவிற்கான நேர்முகத்தேர்வுக்கு முன்னதாக, விசா அப்ளிகேஷன் மையத்தில் ‘பயோமெட்ரிக்’ பதிவிற்காக மற்றொரு அனுமதியை பெற வேண்டியதும் அவசியம்.




விசா நேர்முகத்தேர்விற்கு முன்னதாக ஓ.எப்.சி., எனும் ’ஆப்சைட் பெசிலிடேஷன்’ மையத்திற்கு ‘பயோமெட்ரிக்’ பதிவிற்காக செல்ல வேண்டியது அவசியம். அப்போது தவறாமல், 


* மாணவரது பாஸ்போர்ட், 


* காலாவதியான பாஸ்போர்ட்கள் (இருக்கும்பட்சத்தில்),  


* டி.எஸ்.-160 உறுதிப்படிவம், 


* கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை உத்தரவாத கடிதம் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.



விசா நேர்முகத்தேர்விற்கு தேவையான ஆவணங்கள்:


இறுதியாக அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு, விசா நேர்முகத்தேர்விற்காக செல்லும் போது, 


* மாணவரது பாஸ்போர்ட், 


* காலாவதியான பாஸ்போர்ட்கள் (இருக்கும்பட்சத்தில்),  


* டி.எஸ்.-160 உறுதிப் படிவம், 


* கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதம், 


* ஐ-20 விண்ணப்பம் மற்றும் எஸ்.இ.வி.ஐ.எஸ்., கட்டணம் செலுத்திய ரசீது, 


* கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விசா பெற தகுதியை உறுதிப்படுத்தும் இதர ஆவணங்கள் அனைத்தையும், அவசியம் உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.



குறிப்பு: அமெரிக்க கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற பின், வகுப்புகள் துவங்குவதற்கு 120 நாட்களுக்கு முன்பு, மாணவர் விசா வேண்டி விண்ணப்பிக்கலாம். கல்வி கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை, மாணவர்கள் நிரூபிக்க வேண்டியதும் அவசியம்.




கல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்:


அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில், 4,500க்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.  அவற்றில், சிறிய கல்வி நிறுவனங்களும் உண்டு... பெரிய கல்வி நிறுவனங்களும் உண்டு... மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவு வழங்கும் தரமான கல்வி நிறுவனத்தை ஆராய்ந்து, அறிந்து தேர்வு செய்ய வேண்டும். விசா நேர்முகத்தேர்வின் போது, மாணவர்கள் குறிப்பிட்ட அந்த ஒரு கல்வி நிறுவனத்தை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விவரிக்க வேண்டியதிருக்கும்.



கூடுதல் தகவல்களுக்கு: educationusa.state.gov



-கெண்ட் மே, விசா பிரிவு தலைமை அதிகாரி, அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை.





Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us