எல்எல்.பி., அட்மிஷன் | Kalvimalar - News

எல்எல்.பி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்.பி., சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



படிப்புகள்: எல்எல்.பி., - ஹானர்ஸ் மற்றும் எல்எல்.பி.,



கல்வி நிறுவனங்கள்:




எல்எல்.பி., - ஹானர்ஸ் படிப்பு: சீர்மிகு சட்டப்பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை.




எல்எல்.பி.,:  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்.



தகுதிகள்: எல்எல்.பி., - ஹானர்ஸ் படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எல்எல்.பி., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 



விண்ணப்பிக்கும் முறை: https://emsecure.in/tnlaw23/ எனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 10



விபரங்களுக்கு: www.tndalu.ac.in 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us