நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம் | Kalvimalar - News

நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம்ஏப்ரல் 02,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நாட்டில் எத்தனையோ விதமான கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் இருக்கையில், விளையாட்டுக்கென்றே இருக்கும் ஒரு சிறந்த கல்வி நிறுவனம் பற்றி மாணவர்கள் அறிவது அவசியம்.

அதுதான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விளையாட்டு கல்வி நிறுவனமாக திகழும் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம். பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா நகரில் இது அமைந்துள்ளது. இக்கல்வி நிறுவனம் பாட்டியலா அரண்மனையில் செயல்பட்டு வருகிறது. இந்த அரண்மனை, இக்கல்வி நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்காக, அரச குடும்பத்தால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய விளையாட்டுகளின் மெக்கா என்று அழைக்கப்படும் இந்த கல்வி நிறுவனம், பல சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்கி வருகிறது.

இந்திய விளையாட்டு சம்மேளனத்தின் கல்வி அங்கமாகத் திகழும், விளையாட்டிற்கான தேசிய கல்வி நிறுவனம், கடந்த 1961ம் ஆண்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. அறிவியல் அடிப்படையில் விளையாட்டுக்களை மேம்படுத்தல் மற்றும் பலவிதமான விளையாட்டுக்களில் பயிற்சியாளர்களுக்கு(Coaches) பயிற்சியளித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1973ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பெயர் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்

இந்த கல்வி நிறுவனத்தில் கீழ்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன,

* M.Sc. (SPORTS COACHING)
(Affiliated with Punjabi University Patiala)
* POST GRADUATE DIPLOMA IN SPORTS MEDICINE
(Affiliated with Baba Farid University of Health Sciences Faridkot and Recognized by MCI)
* DIPLOMA IN SPORTS COACHING
(At SAI Centre - Patiala, Bangalore and Kolkata)
* SIX WEEK CERTIFICATE COURSES IN SPORTS COACHING
* COACH DEVELOPMENT PROGRAMME
* IOC SOLIDARITY COURSES IN SPORT
* ADVANCE COURSES FOR IN SERVICE COACHES
* REFRESHER COURSE IN SPORTS COACHING
* SPORTS MASSAGE COURSE
* GROUND MANAGEMENT COURSE
(For Ground Men)

மேலும், பல புதிய படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிச்சிறப்பு மையங்கள்

வளர்ந்து வரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயாராகும் வகையில், இந்திய விளையாட்டு சம்மேளனம், நாட்டின் பல பகுதிகளில் தனிச்சிறப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையங்களில் ஒன்று, நேதாஜி சுபாஷ் கல்வி நிறுவனத்தில் கடந்த 2000ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

இந்த தனிச்சிறப்பு மையமானது, தொடர்ச்சியான பயிற்சி முகாம்களை சிறந்த விளையாட்டுத் திறன் படைத்தவர்களுக்காக நடத்துகிறது.

இந்த மையமானது, அத்லெடிக்ஸ், சைக்ளிங், ஜுடோ மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சிகளை வழங்குகிறது.

விளையாட்டு அறிவியல்கள்

விளையாட்டு வீரர்களுக்கு அறிவியல் அடிப்படையில் பயிற்சிகளை வழங்கவும், விளையாட்டுப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அறிவியல் அறிவை வழங்குவதற்காகவும், பல பாடப்பிரிவுகளைக் கொண்ட விளையாட்டு அறிவியல்கள் துறை, இக்கல்வி நிறுவனத்தில் கடந்த 1983ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

பலவிதமான விளையாட்டுப் படிப்புகளை வழங்கும் அதேநேரத்தில், பயிற்சி பெறுபவர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவியல் திறன் மற்றும் அறிவையும், இத்துறை வழங்குகிறது.

விளையாட்டு அறிவியல்கள் துறை கீழ்கண்ட பல பிரிவுகளில் பயிற்சிகளை வழங்குகிறது.

SPORTS MEDICINE

. General Medical Care of Athletes.
· Medical Evaluation of Athletes.
· Common Injuries in Sports.
· Prevention of Common Injuries in different Sports
· Drug Trials on Treatment of Injuries.

EXERCISE PHYSIOLOGY

. Evaluation of Physiological Fitness of National athletes
· Measurement Analysis of Physiological Functions of Sportspersons.
· Physiological Demands in Various Games and Sports.
· Measurement of Physiological Functions at Altitude

SPORTS BIOCHEMISTRY

. Biochemical Fitness Tests.
· Hematological Studies in Athletes.
· Electrolyte Balance studies in Athletes.
· Lipid Profile in Athletes.
· Iron Status in Women Athletes.

SPORTS ANTHROPOMETRY

· Anthropometrics Investigations of High Performance Athletes.
· Talent Spotting on the basis of Physical Growth Investigations.
· Evaluation of Muscles, Bones and Fat Masses.
· Physical Fitness in relation to various Anthropometrics Characteristics.

SPORTS BIOMECHANICS

. High Speed Photography.
· Cinematographic Analysis.
· Kinematics Measurements.
· Kinetic/Dynamometric Analysis.
· Automated Analysis of Biomechanical Data.

GENERAL THEORY AND METHODS OF TRAINING

. Performance Diagnostics.
· Sports Talent.
· Fitness Norms.
· Methods of Training.
· Motor Development.
· Training Process.

SPORTS PSYCHOLOGY

* Development of psychological profile.
* Psychological management of athletes.
* Evolution of sports specific test.
* Development of modified autogenic training.
* Predictive validity of psychomotor test.

நூலகம்

இக்கல்வி நிறுவனத்திலுள்ள நூலகம் சிறப்பு மற்றும் தொழில்நுட்ப நூலகம் என்று சொல்லுமளவிற்கு சிறந்த நூலகமாக விளங்குகிறது. Archery, Athletics, Badminton, Basketball, Boxing, Chess, Cycling, Cricket, football, Gymnastics, Golf, Hockey, Handball, Horse Riding, Judo, Kho-Kho, Kabaddi, Lawn Tennis, Mountaineering, Rowing, Swimming, shooting, Snooker, Table tennis, Volleyball, Weightlifting, Wrestling, Yoga and Yatching போன்ற பல துறைகளில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

மேலும், Bio-chemistry, Sports Biomechanics, Sports Biology, Sports Medicine, exercise of Physiology, Anthropometry, sports Encyclopedia, Food Nutrition, Kinesiology, Sports Sociology, Physical Fitness & Physical Education போன்ற துணைநிலைப் பாடங்கள் குறித்தும் புத்தகங்கள் உள்ளன.

உலகின் பலப் பகுதிகளிலிருந்தும் பெறப்படும் டெக்னிக்கல் ஜர்னல்களின் தொகுதிகள் இந்த நூலகத்தில் உள்ளன. நமது விளையாட்டு விஞ்ஞானிகள், பயிற்சியாளர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் துறைதொடர்பான இன்னபிற நிபுணர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 20,000 புத்தகங்கள் உள்ளன. முனைவர் பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அபரிமிதமான தகவல்களை தருவதில் இந்த நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.

விளையாட்டில் முன்னேறிய நாடுகளில் வெளிவரும் சமீபத்திய சிறந்த விளையாட்டு இலக்கியங்களைப் பெற்று, இந்திய பயனாளிகளுக்கு இந்த நூலகம் வழங்குகிறது. மேலும், விளையாட்டு விரும்பிகளுக்கான விரிவான மல்டிமீடியா விளையாட்டு தகவலை வழங்கும் இலக்கையும் இந்த நூலகம் வைத்துள்ளது. இந்த நூலகம் மட்டுமின்றி, பெங்களூர், கல்கத்தா மற்றும் காந்திநகர்(அகமதாபாத்) ஆகிய இடங்களில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனத்தின் மையங்களிலும் நூலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும், விளையாட்டு ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், தங்களின் ஆய்வு தொடர்பாக, நேதாஜி சுபாஷ் கல்வி நிறுவன நூலகத்திடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கின்றன.

இந்த நூலகத்தில், ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய அரிதான பல தொகுப்புகள் உள்ளன.

தேசிய பயிற்சி முகாம்கள்

பலவிதமான தேவைகளை முன்னிட்டு, தேசிய பயிற்சி முகாம்களை இக்கல்வி நிறுவனம் நடத்துகிறது. சீனியர் தேசிய முகாம் மற்றும் ஜுனியர் தேசிய முகாம் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடக்கும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் விதமாக பயிற்சி செய்வதற்கு, வெவ்வேறு காலகட்டங்களில் நாட்டின் பல பகுதிகளில் இந்த தேசிய பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில், தரமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இத்தகைய முகாம்களுக்கு ஆகும், இலவச உணவு மற்றும் தங்குமிடம், பயிற்சி கையேடுகள், போட்டி/நிகழ்ச்சி கையேடுகள் மற்றும் உபகரண ஆதரவு உள்ளிட்ட செலவுகளை, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது.

இந்த தேசிய பயிற்சி முகாம்களில், இந்திய மற்றும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள். மேலும், இந்த முகாம்களில், தொடர்ச்சியான இடைவெளிகளில் அறிவியல் சோதனைகளும் நடைபெறுகின்றன.

இந்திய விளையாட்டு சம்மேளன பயிற்சி மையம்(SAI Training Centre)

வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களின் திறன்களை அதிப்படுத்த, இந்திய விளையாட்டு சம்மேளன கட்டுப்பாட்டின் கீழ், SAI Training Centre மற்றும் நேதாஜி சுபாஷ் கல்வி நிறுவனம் ஆகியவை, Archery, Athletics, Boxing, Cycling, Fencing, Gymnastics, Hockey, Judo, Shooting, Wushu போன்ற துறைகளில் தேர்ந்தெடுத்த விளையாட்டு வீரர்களுக்கு தினசரி உணவு மற்றும் தங்குமிட சேவைகளை நடத்துகிறது.

இக்கல்வி நிறுவனம் பற்றி மேலும் விரிவான மற்றும் பரவலான விபரங்களை அறிந்துகொள்ள http://www.nsnis.org/ என்ற இணையதளம் செல்லவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us