மதுரை காமராஜர் பல்கலை.க்குப் புதிய துணைவேந்தர் | Kalvimalar - News

மதுரை காமராஜர் பல்கலை.க்குப் புதிய துணைவேந்தர்

எழுத்தின் அளவு :

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக ஆர். கற்பக குமாரவேல் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக ஆர். கற்பக குமாரவேல் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.எஸ். பர்னாலா இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள்.


பேராசிரியர் கற்பக குமாரவேல் இதுவரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்வி தொழில்நுட்பவியல் துறையின் தலைவராக இருந்து வந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரக் குழு மற்றும் காமன்வெல்த் கல்விக் குழு ஆகியவற்றின் கல்விப் பணி ஆலோசகராக இருந்தவர். வெளிப்படையான நிர்வாகமும் நல்ல கல்விச் சூழ்நிலையை ஏற்படுத்துவதுமே எனது முக்கிய நோக்கம் என்று குறிப்பிடும் புதிய துணைவேந்தர் கற்பக குமாரவேல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சிறந்த பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கான வாய்ப்பாக இதைக் கருதுகிறேன் என்கிறார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us