பல்வேறு பாடப்பிரிவுகளை பற்றி அறிய வேண்டும் | Kalvimalar - News

பல்வேறு பாடப்பிரிவுகளை பற்றி அறிய வேண்டும்

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 முடித்த பின், என்ன படிப்பது, எங்கு படிப்பது என்பது தொடர்பாக மாணவ, மாணவியருக்கு ஏற்படும் சந்தேகங்கள், மனக்குழப்பத்தை போக்க, தினமலர் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

எஸ்.ஆர்.எம்., பல்கலை (சர்வதேச நிகழ்வுகள்) முதன்மை ஒருங்கிணைப்பாளர் கோபால் பேசியதாவது: பிளஸ் 2 முடித்ததும் பல்வேறு விதமான கேள்விகள் மாணவர்களுக்குள் எழும். அடுத்து என்ன படிப்பது? பி.., எம்.பி.பி.எஸ்., படிப்புகளைபோல் ஏராளமான படிப்புகள் இருக்கின்றன. அதை தெரிந்து கொள்ள வேண்டும். பி.., பி.எஸ்.சி., பி.சி.., பி.பி.., பி.பி.எம்., சி,., பி.டி.எஸ்., கால்நடை, சட்டம், பிசியோதெரபி, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட், பிலிம் டெக்னாலஜி, இசை, இன்டீரியர் டிசைனிங் என எண்ணற்ற படிப்புகள் உள்ளன.

எப்பது தேர்ந்தெடுப்பது? நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பில் உள்ள மகத்துவம் என்ன? எதை சார்ந்த படிக்க உள்ளீர்கள். உங்களுக்கு எது பொருத்தமானது; மனதுக்கு பிடித்தது எது? உங்களின் நாட்டம் எதில் உள்ளது என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறியலாம். அவர்கள் விருப்பப்பட்டு படிக்கும் பாடம் எது? எதில், அதிக மார்க் வாங்குகின்றனர். நண்பர்களிடம் எத்துறை பற்றி பேசுகிறார்கள் என்பதை கவனித்தால், அவர்களின் ஆர்வம் தெரியவரும். பிறருடன் ஒப்பிட்டு படிப்பை தேர்தெடுக்கக் கூடாது.

எத்துறையை தேர்ந்தெடுத்து படித்தாலும், வேலைவாய்ப்பு திறனை சார்ந்து தான் வேலை கிடைக்கும்; அதற்கேற்ற ஊதியமும் கிடைக்கிறது. கல்லூரிகளில் மார்க் மட்டும் எடுத்தால் போதாது; நேர்முக தேர்வில் வெற்றியாளராக உலா வருவதற்கான தகுதிகள் இருக்க வேண்டும். இதற்கு பேச்சாற்றல் திறன், துறை அறிவு, பொது அறிவு இருக்க வேண்டும்.

எங்கு படிப்பது? உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் தகுதி, வேலைவாய்ப்புக்கு அதிக வாய்ப்புள்ள இடம், புத்தகப்படிப்பை கடந்து, கூடுதல் திறன்களை கற்றுத்தரும் நிறுவனம், கல்வி கட்டணம், நூலக வசதி, விளையாட்டு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் கல்லூ ரியை தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடம் ஆலோசித்து உயர் கல்வி குறித்து அறிவுரை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற இறுதி முடிவை நீங்கள் எடுங்கள்; வெற்றி பெறுங்கள்! இவ்வாறு, கோபால் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us