‘மாணவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும்’ | Kalvimalar - News

‘மாணவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும்’

எழுத்தின் அளவு :

வேல் டெக் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் ரங்கராஜன் அளித்த பேட்டி:

நவீன தொழிற்நுட்பங்கள் அடங்கிய படிப்புகளை வழங்குவதிலும், ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும் நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வேல் டெக் திகழ்கிறது. இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களையும் பேராசிரியர்களின் உதவியோடு ஆய்வுப் பணிகளில் ஈடுபடுத்துகிறோம். ரோபோ மூலமாக மின்சாரத்தை ஆராயும் திட்டத்தில் தேசிய அளவில் முதல் பரிசு வென்றுள்ளது ஆராய்ச்சிக்கு இக்கல்வி நிறுவனம் அளிக்கும் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

சிடாக், டாபே, ஜிஆர்க் மற்றும் ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு எம்.டெக் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இ-கழிவுகளை பிரிவுக்கும் பிரத்யேக தொழிற்நுட்பம் கல்வி நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களுக்கும், சுயதொழில் முனைவோருக்கும் ஒரு புது வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மிகச்சிறந்த தொழில் வல்லுனர்களை கல்வி நிறுவனங்களுக்கே நேரடியாக அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஒரு பல்கலைக்கழகம், 4 மேலாண்மை கல்லூரிகள், மூன்று பொறியியல் கல்லூரிகள், ஒரு நர்சிங் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இந்த கல்வி நிறுவனத்தின்கீழ் செயல்படுகின்றன. இவற்றில் 18 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். துறை வாரியாக தனித்தனியே நூலகம், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியரின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் புராஜெக்ட்களை பாதுகாக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை இளம் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஊக்கிவிக்கப்படுகிறார்கள். 57 பொதுத்துறைகள் / ஆராய்ச்சி நிறுவனங்கள், 57 சர்வதேச அமைப்புகள், 42 தொழில் நிறுவனங்கள் என 156 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்வி ஆலோசனைக் குழுவின் பரிந்துரைப்படி, ஆண்டுதோறும் பாடத்திட்டத்தில் தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மத்திய அரசு மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட 15 கோடி ரூபாயில் பல்வேறு ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிப் பணிகளும், மேம்பாடும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் அவசியம்; அதன்மூலம் மாணவர்களை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு தரமுடியும்.  இதற்காகவே, கல்வி நிறுவன வளாகத்தில் ‘ரிசர்ச் பார்க்’ நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பை பொறுத்தவரை, இந்தாண்டு மட்டும் 140 தொழில் நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்ய வளாக நேர்காணல் நடத்தியுள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us