‘கடல்சார் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு தேவை’ | Kalvimalar - News

‘கடல்சார் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு தேவை’

எழுத்தின் அளவு :

அமெட் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் அளித்த பேட்டி:

பல்கலையில், 24 இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 3,700 பேர் படிக்கின்றனர். பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவேளையில், வேலை வாய்ப்பிற்கான திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும்வகையில், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறைசார்ந்த அனுபவம் உள்ளவர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 2 பயனுள்ள படிப்புகளை மேற்கொள்ள வசதியாக, இரட்டைப் படிப்பு (dual degree) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் பி.இ. மரைன் இன்ஜினியரிங் மற்றும் பி.எஸ்சி. நாடிகல் சயின்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவைதவிர, பி.இ. நேவல் ஆர்கிடெக்சர் அன்ட் ஆப்ஷோர் இன்ஜினியரிங்,  பெட்ரோலியம் இன்ஜினியரிங், ஹார்பர் அன்ட் ஓஷன் இன்ஜினியரிங்,
மரைன் எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியிரிங்,  ஷிப் பில்டிங் அன்ட் ரிப்பேர் கன்வெர்ஷன் டெக்னாலஜி, மரைன் பயோ டெக்னாலஜி உட்பட பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

மேலாண்மப் படிப்பில், ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட், ஷிப்பிங் பைனான்ஸ், மரைன் ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், குரூஸ்(cruise) ஷிப் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட், ப்ளீட் ஆபரேஷன் மேனேஜ்மென்ட், மரைன் இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் ஆகிய எம்.பி.ஏ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நேவல் ஆர்கிடெக்சர் அன்ட் ஆப்ஷோர் இன்ஜினியரிங், டிரெடிங் டெக்னாலஜி, மரைன் கான்ட்ராக்ட்ஸ் அன்ட் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் ஹார்பர் இன்ஜினியரிங் ஆகிய 3 ஆண்டு மற்றும் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புகள் உட்பட ஏராளமான படிப்புகள் உள்ளன.

சிறந்த நூலக வசதி, இன்டர்நெர்வசதி, உடல்திறனை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம் மற்றும் யோகா மையம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. புரொபஷனல் பயிற்சி அளிப்பதன் மூலமாக வேலை வாய்ப்பு எளிதாகிறது. அதிக ஊதியத்தில், சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் இத்தகைய படிப்புகள் குறித்து இன்றைய மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கடல்சார் படிப்புகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us