‘சிறுபான்மையினர் கல்வி வளர்ச்சியே பிரதான நோக்கம்’ | Kalvimalar - News

‘சிறுபான்மையினர் கல்வி வளர்ச்சியே பிரதான நோக்கம்’

எழுத்தின் அளவு :

ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியின் தலைவர் குரியன் தாமஸ் அளித்த பேட்டி:

சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த 2001ம் ஆண்டு ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டது. 30 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் இக்கல்லூரியில் 8 இளநிலை பொறியியல் படிப்புகளும், 4 முதுநிலை பொறியியல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

மொத்தம் ஆயிரத்து 500 மாணவர்களும், 140 ஆசிரியர்களும் உள்ளனர். 15 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகம், இருபாலருக்கும் தனித்தனி விடுதி, போதிய போக்குவரத்து வசதி, ஆய்வகங்கள், அதிவேக இணைய வசதி உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தமிழக சுயநிதி கல்லூரிகளில் பயோமெடிக்கல் படிப்பையும், தென்மாநில கல்லூரிகளில் பெட்ரோலியம் இன்ஜினியரிங் படிப்பையும் முதலில் அறிமுகப்படுத்தியது இக்கல்லூரி தான்.

இங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடையே ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நன்னெறி கல்வியின் வழியாக சிறந்த பண்புகளை வளர்க்க ஊக்குவிக்குறோம். சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அதிகம் படிக்கும் இக்கல்லூரியில், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம், நிபுணர்களுடனான கலந்துரையாடல், விளையாட்டு பயிற்சிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊக்கிவிப்பு ஆகியவை அவற்றில் சில.

மாணவர்களின் குடும்பச் சூழல், சந்திக்கும் கஷ்டங்கள் அறிந்து அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்கிறோம். ஆண்டுமுழுவதும் அந்த மாணவர்களை உரிய முறையில் கண்காணித்து அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகிறோம்.

கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி இயக்குநர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களையும் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இக்கல்லூரியில் பயின்ற 4 மாணவர்கள் சிங்கப்பூரில் ஓர் ஆண்டு ஊக்கத்தொகையுடன் கூடிய ‘இன்டர்ன்சிப்’ல் ஈடுபட்டுள்ளனர். முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் கல்லூரி வளாக நேர்காணலின் மூலம் வேலைவாய்ப்பும் பெறுகின்றனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us