கனரா வங்கி | Kalvimalar - News

கனரா வங்கி

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

  • செலுத்த வேண்டிய முன்தொகை:

    1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை

  • நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

  • வட்டி விகிதம்:

    • நான்கு லட்சம் ரூபாய் வரை: BR+3.00%
    • நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: BR+4.00% 
    • ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 20.00 லட்சம் வரை BR+2.00%
    • ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.எஸ்.பி., கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு: BR+6.00%
    • மாணவிகளுக்கு ஒரு சதவீத சிறப்பு சலுகை வழங்கப்படும்.

    கடனை திருப்பி செலுத்தும் முறை:
    படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து (இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

    உத்தரவாதம்:
    நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
    நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை.

    ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் உத்தரவாதம்.

    Advertisement
    Search this Site
    dinamalar advertisement tariff

    மேலும்

    Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us