அகதா ஹாரிசன் உதவித்தொகை | Kalvimalar - News

அகதா ஹாரிசன் உதவித்தொகைடிசம்பர் 19,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் ஒரு பிரத்யேக திட்டம் அகதா ஹாரிசன் மெமோரியல் பெல்லோஷிப்



இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆய்வாளருக்கு, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஆண்டனி கல்லூரியில் ஆய்வு மேற்கொள்வதற்கான அனைத்து செலவினங்களையும் மத்திய அரசே ஏற்கிறது.



பெல்லோஷிப்பின் காலம்: ஓர் ஆண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படும் எனினும் ஆய்வாளரது செயல்திறனின் அடிப்படையில் மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது.



தகுதிகள்:


முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதோடு, வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி., நிறைவு செய்திருக்க வேண்டும். 



வயது வரம்பு: 30 முதல் 40 வயதுக்குட்டவராக இருத்தல் வேண்டும்.



அனுபவம்: பிஎச்.டி., நிறைவு செய்ததற்கு பிறகு, இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு அளவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



உதவித்தொகை விபரம்:


கல்வி உதவித்தொகை -  22,063 பவுண்டுகள்


போக்குவரத்து செலவு - 890 பவுண்டுகள்


கல்லூரி மதிய உணவு செலவு -  2,407 பவுண்டுகள்


இரவு நேர உணவு செலவு - 679 பவுண்டுகள்


இதர நிர்வாகக் கட்டணங்கள் - 3,930.85 பவுண்டுகள்


மொத்தம்:  29,944.85 பவுண்டுகள்



தேர்வு செய்யப்படும் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவிக்கான விமான கட்டண செலவினங்களும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. 



விண்ணப்பிக்கும் முறை: http://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: பொதுவாக ஜனவரி மாதத்தில் இதற்கான இந்த உதவித்தொகை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும். செயல்திறன் மற்றும் திறமை அடிப்படையில் நேர்காணல் வாயிலாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 



விபரங்களுக்கு: www.education.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us