புராடக்ட் டிசைன் | Kalvimalar - News

புராடக்ட் டிசைன்

எழுத்தின் அளவு :

நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பல பொருட்களை புராடக்ட் டிசைனர்கள் தான் வடிவமைக்கின்றனர். நுகர்வோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்பட பொருட்களை வடிவமைக்க தயாரிப்பாளருக்கு இவர்கள் உதவுகின்றனர். ஒரு பொருளின் பயன்பாடு என்ன, அதை மேலும் பயனுள்ளதாக்க எவ்வாறு வடிவமைக்கலாம் போன்ற விஷயங்களை இவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

சந்தையில் அது விற்பனைக்கு வரும் போது வெற்றிகரமானதாக அமைய இவர்களின் உதவி தயாரிப்பாளர்களுக்கு தேவை. இதனால் தகுதியும், திறமையும் வாய்ந்த வடிவமைப்பாளர்களுக்கான தேவை எப்போதும் உள்ளது. மூலப்பொருட்களின் உதவியுடன் புதிய பொருட்களை வடிவமைப்பது, வண்ணங்களை பயன்படுத்துவது, வரைவது போன்ற பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன.

புராடக்ட் டிசைன்ஸ் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.  பலருக்கு உடனடியாக பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. சிலர் சொந்தமாகவும் வடிவமைப்பு நிறுவனங்களை தொடங்குகின்றனர். தமிழகத்தில், கோவையில் உள்ள டி.ஜே. அகாடமி ஆப் டிசைனில் இரண்டு ஆண்டு கோர்சாக புராடக்ட் டிசைன் கற்பிக்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us