ஆர்ட் டைரக்டர் மற்றும் கட்டடக்கலை பொறியாளர் | Kalvimalar - News

ஆர்ட் டைரக்டர் மற்றும் கட்டடக்கலை பொறியாளர்

எழுத்தின் அளவு :

நவீன முதலாளித்துவ தொழில்நுட்ப பொருளாதார யுகத்தில், கட்டடக்கலை தொழில்நுட்பம் மற்றும் படைப்பாக்கம் தொடர்பான நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

ஆனால், தனது துறையில் ஒருவர் வெற்றிக்கொடி நாட்ட வேண்டுமானால், அத்துறை சார்ந்த திறன்களை, தேவைப்படும் அளவைவிட, அதிகளவில் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், மிகப்பெரும் போட்டிகளை சமாளித்து வெற்றியை நமதாக்க முடியும். மன உறுதியும் முக்கியம்.

ஆர்ட் டைரக்ஷன் துறை

சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில், ஆர்ட் டைரக்டர்களின் தேவை எப்போதுமே அதிகமாக உள்ளது. மேலும், விளம்பரப் படங்களிலும் இவர்களின் தேவை மிக அதிகம்.

இது ஒரு செயற்கைக் கோள் யுகம். படைப்பாளிகளுக்கு பன்முகத் தன்மை வாய்ந்த வாய்ப்புகளை அள்ளி வழங்கும் யுகம். எனவே ஆர்ட் டைரக்ஷன் போன்ற துறைகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.

பணிகள்

நவீன தொழில்நுட்ப உலகில், எப்போதுமே வளர்ச்சியை நோக்கி செல்லும் துறைகளில், மீடியா துறை முக்கியமானது. ஆர்ட் டைரக்ஷன் துறையில் படிப்பை முடித்த மாணவர்கள், விளம்பரம், சினிமா, தொலைக்காட்சி, பப்ளிஷிங், வெப் டிசைன் அல்லது கேம் டெவலப்மென்ட் தொழில்துறைகள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளை கட்டாயம் பெறலாம்.

தேவைப்படும் திறன்கள்

டைரக்ஷன் துறையில் தங்களின் பணியை அமைத்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு, அத்துறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.

ஆர்ட் டைரக்டர் என்பவர், ஒரு முழு குழுவையும் நிர்வாகம் செய்து, படைப்பாக்க சிந்தனைகளை நிஜ வாழ்விற்கு கொண்டுவரும் பணியை மட்டும் செய்வதில்லை. மாறாக, பட்ஜெட் திட்டமிடுதலில், புரடக்ஷன் டிசைனருடனும் இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இவரின் பணி, ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த பணி.

கட்டடக்கலை(Architectural) இன்ஜினியரிங் துறை

கட்டடக்கலை பொறியியல் என்பது, ஒரு கட்டடத்தை பூகம்பம், புயல், வெள்ளம் மற்றும் கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட ஆபாயங்களை தாங்கி நிற்கும் வகையில், திட்டமிட்டு, வடிவமைத்து கட்டும் பொருட்டு, பொறியியல் கோட்பாடுகளை பயன்படுத்தும் துறையாகும்.

ஒரு Architectural Engineer என்பவர், வெறுமனே கட்டடத்தின் அழகு அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதில்லை. மாறாக, சிஸ்டம் வடிவமைப்புகள், கட்டுமான அமைப்பு, கணினி அடிப்படையிலான வடிவமைப்புகள் மற்றும் மாதிரிகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறார்.

பணிகள்

எப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தின் தேவைகளுக்கேற்ற, ஒரு திறமான கட்டுமானத்தை வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற நபர்கள், கட்டடக்கலை தொழில்துறைக்கு முக்கியமாக தேவைப்படுகிறார்கள்.

Architectural பொறியாளர்கள் என்பவர்கள், structural engineers, construction engineers, construction தொழில் நிபுணர்கள், நகர்ப்புற, சமூகம் மற்றும் பிராந்திய திட்டமிடுநர்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பாளர்கள் ஆகிய பணிநிலைகளிலும் பணியாற்றுகிறார்கள்.

தேவைப்படும் திறன்கள்

நல்ல தகவல்தொடர்பு திறன்கள், பகுப்பாய்வு சிந்தனை, வேறுபட்ட குழுக்கள் மற்றும் வேறுபட்ட சூழல்களில் பணிபுரியும் தன்மை, கையினாலேயோ அல்லது கணினி அடிப்படையிலான வரைவைப் பயன்படுத்தி டயகிராம் டிசைன்களை உருவாக்குதல், தரவுகளை பகுப்பாய்வு செய்து விளக்குதல் உள்ளிட்ட பல்வகையான திறன்களைப் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us