வேளாண்மை இதழியல் துறை பற்றி தெரியுமா? | Kalvimalar - News

வேளாண்மை இதழியல் துறை பற்றி தெரியுமா?

எழுத்தின் அளவு :

வேளாண்மை இதழியல்(ஜர்னலிசம்) என்று ஒரு துறை உள்ளது. பெயரைக் கேட்டாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். வேளாண்மைத் தொடர்பான அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதான் வேளாண்மை இதழியல் என்பது.

ஒரு வேளாண்மை இதழியலாளர் என்பவர், வேளாண் துறை சார்ந்த பல விஷயங்களை தெரிந்து வைத்து, அதில் மிகுந்த ஊக்கம் கொண்டிருப்பதோடு, அத்துறை சார்ந்த பல முக்கியமான அம்சங்களை வெளிக்கொணர்பவராகவும் இருத்தல் அவசியம்.

வேளாண்மையுடன் தொடர்புடைய மனித பரிமாண விஷயங்கள் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை இத்துறை ஆய்வு செய்கிறது. அதன் காரணமாக, இத்துறையின் வாய்ப்புகளையும் விரிவாக்குகிறது.

இத்துறையானது, வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி முதற்கொண்டு, பதப்படுத்துதல் வரையிலும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தல், பயன்பாடு, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு பரவலான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

உணவு, உணவளித்தல், பைபர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், இயற்கை வள மேலாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றியும் ஆராய்கிறது. வேளாண்மை இதழியலாளருக்கான பயிற்சி என்பது, சாதாரண இதழியலாளருக்கு அளிக்கப்படும் பயிற்சியை ஒத்ததுதான்.

ஆனால், அவருக்கு, வேளாண்துறை துறை பற்றிய தேவையான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். வேளாண் இதழியல் என்பது ஒரு துணைநிலை துறையாக இருந்து, இன்று சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெற்று, பெரிய துறையாக வளர்ந்து வருகிறது.

இப்படிப்பை மேற்கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. விளம்பர நிறுவனங்களுக்கான ஒரு வேளாண் கிளையன்டாக(client) இருத்தல் அல்லது வேளாண் பொருள் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்தில் பொதுமக்கள் தொடர்பு பயிற்சியாளராக இருத்தல் போன்ற வாய்ப்புகளைப் பெறலாம்.

ஆனால், இத்துறை படிப்பை மேற்கொள்ளும் பலரும், வேளாண் சார்ந்த பிரத்யேக பத்திரிகைகள், கிராமப்புறம் சார்ந்த பத்திரிகைகள் மற்றும் இதர செய்தித்தாள்கள் ஆகியவற்றில் பத்திரிகையாளர்களாக பணிபுரிய சென்றுவிடுகிறார்கள்.

இத்துறையில், கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் என்ற பணியும் மிகவும் மதிப்பு வாய்ந்த பணியாக கருதப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்தளவு பல்கலைகளே, வேளாண் இதழியல் என்ற இந்தப் படிப்பை வழங்கி வருகின்றன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

* தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோவை
* ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண்மை பல்கலைக்கழகம் - ஐதரபாத்
* அசாம் வேளாண்மை பல்கலை - ஜோர்காட்
* சவுத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலை - ஹிசார்
* வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சந்திர சேகர் ஆசாத் பல்கலை - கான்பூர், உத்திரப் பிரதேசம்
* சி.எஸ்.கே. இமாச்சல் பிரதேஷ் வேளாண் பல்கலை - பாலம்பூர்
* சர்தார்குரூஷிநகர் தண்டிவாடா வேளாண் பல்கலை, பாலம்பூர்
* வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான கோவிந்த் பல்லாப் பந்த் பல்கலை - பன்ட்நகர், உத்ரகாண்ட்
* மரத்வாடா வேளாண்மை பல்கலை - பர்பானி, மகாராஷ்டிரா
* வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான மஹாரானா பிரதாப் வேளாண் பல்கலை - உதய்ப்பூர், ராஜஸ்தான்
* வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நரேந்திர தேவ வேளாண்மை பல்கலை - பெய்சாபாத், உத்திரபிரதேசம்
* வேளாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒரிசா வேளாண் பல்கலை - புபனேஷ்வர்
* பஞ்சாப் வேளாண் பல்கலை
* ராஜேந்திரா வேளாண் பல்கலை - பூசா சமஸ்திபூர், பீகார்
* ராஜஸ்தான் வேளாண் பல்கலை - ராஜஸ்தான்
* அலகாபாத் வேளாண் கல்வி நிறுவனம்
* கொல்கத்தா பல்கலை
* கேரள வேளாண் பல்கலை - திரிச்சூர்
* வேளாண் அறிவியல்களுக்கான பல்கலை - பெங்களூர்
* வேளாண் அறிவியல்களுக்கான பல்கலை - தார்வாட், கர்நாடகா
* ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலை - அனந்த்ப்பூர், ஆந்திரா

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us