நிப்ட் சென்னை | Kalvimalar - News

நிப்ட் சென்னைஆகஸ்ட் 03,2023,16:35 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி - சென்னை, 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 16 நிப்ட் வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. 



இளநிலை பட்டப்படிப்புகள் - 4 ஆண்டுகள்:


பி.டெஸ்., - பேஷன் டிசைன்


பி.டெஸ்., - லெதர் டிசைன்


பி.டெஸ்., - ஆக்ஸசரி டிசைன்


பி.டெஸ்., - டெக்ஸ்டைல் டிசைன்


பி.டெஸ்., - நிட்வேர் டிசைன்


பி.டெஸ்., - பேஷன் கம்யூனிகேஷன்


பி.எப்.டி., - அப்பேரல் புரொடக்சன்



முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.எப்.எம்., - மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட்


எம்.எப்.டி.,-  மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி



டிப்ளமா படிப்புகள்: ஜுவல்லரி டிசைன், பேஷன் பிட் & ஸ்டைல், இந்தியன் கிராப்ட் அப்ரிசியேஷன், பேஷன் ரீடெயில் ஸ்டோர் ஆப்ரேஷன்ஸ், பேஷன் என்ட்ர்பிரனர்ஷிப், இ-காமர்ஸ் மேனேஜ்மெண்ட்.



பி.ஜி., டிப்ளமோ படிப்பு: ஆடை தயாரிப்பு மற்றும் மெர்கண்டைசிங்.



சி.இ., சான்றிதழ் படிப்புகள்: பேஷன் நிட்வேர் அண்டு புரொடக்சன் டெக்னாலஜி மற்றும் டிசைன் டெவெலப்மெண்ட் பார் எத்னிக் வியர்.



கல்வித் தகுதிகள்:


இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஜி.ஏ.டி.,- பொது திறன் தேர்வு, சி.ஏ.டி., - கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட், நேர்காணல் ஆகிய மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது.



எம்.எப்.எம்., மற்றும் எம்.எப்.டெக்., போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஜி.ஏ.டி., குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது. முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதி மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் டிப்ளமோ மற்றும் சி.இ., சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



வேலை வாய்ப்புகள்:


பேஷன் டிசைனர், இல்லஸ்ட்ரேட்டர், பேஷன் கோ-ஆர்டினேட்டர், ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர், டெக்ஸ்டைல் டிசைனர், பேஷன் அசிஸ்டெண்ட், பேஷன் கன்சல்டன்ட், புராஜெக்ட் லீடர், டெக்னிக்கல் லீட், குவாலிட்டி ஆடிட்டர், பிராண்ட் மேனேஜர், இன்போகிராபிக் டிசைனர், டேட்டா அனலிஸ்ட், மெட்டீரியல் மேனேஜர், அப்பேரல் டிசைனர், புரொடக்‌சன் பிளானர், பிளாண்ட் லேஅவுட் டிசைனர் போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் கிடைக்கும்.



விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



விபரங்களுக்கு: https://nift.ac.in/chennai/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us