முதல்பக்கம் » இளநிலை பட்டப்படிப்புகள்

     
    மொத்தம் படிப்புகள் (267)
  • புள்ளியியல் - பி.எஸ்சி.,
  • தமிழ் - பி.லிட்.,
  • தமிழ் மொழியும் இலக்கியமும் - பி.ஏ.,
  • டேக்ஸேஷன் - பி.காம்.
  • தெலுங்கு இலக்கியம் - பி.ஏ.,
  • டெக்ஸ்டைல் வேதியியல் - பி.டெக்.,
  • டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் - பி.இ
  • டெக்ஸ்டைல் டெக்னாலஜி - பி.டெக்.
  • சுற்றுலா - பி.ஏ.,
  • சுற்றுலா மற்றும் வரவேற்பு மேலாண்மை - பி.எஸ்சி.,
  • சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை - பி.காம்
  • பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை - பி.ஏ.,
  • யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை - பி.யு.எம்.எஸ்.,
  • உருது இலக்கியம் - பி.ஏ.,
  • (அலங்கார்) வேதா - பி.ஏ.
  • கால்நடை அறிவியல் - பி.வி.எஸ்சி.,
  • வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை, கிளி, புறா போன்ற செல்லப் பிராணிகளுடன் நமது உணவுத் தேவைகளுக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங் களும் நம்மோடு வளர்கின்றன. குறிப்பாக மேல் தட்டு மக்களிடையே செல்லப்பிராணிகளை வளர்ப்பது ஒரு கவுரவ அம்சமாகவே இருந்து வருகிறது. விலங்குகள் கடவுளால் மனிதருக்குத் தரப்பட்ட பரிசுகள் என்று கூறப்படுகிறது. இவை இல்லாவிட்டால் உலகமே அழிவை நோக்கிச் சென்றுவிடும் என்றும் கருதப்படுகிறது. எனவே இந்த விலங்குகளை வளர்ப்பது, பாதுகாப்பது, நோய்களிலிருந்து காப்பாற்றுவது போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. நோயுற்ற விலங்குகளை காப்பது நோயுற்ற மனிதரை பாதுகாப்பதை விட கடினமானது. ஏனெனில் மனிதர்களைப் போல விலங்குகளால் தங்களது பிரச்னைகளை சொல்ல முடிவதில்லை. இவ்வாறு சிறு பிராணிகளையும், மிருகங்கள், விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் ஆகிய அனைத்தைப் பற்றியும் படிப்பதே கால்நடை அறிவியல் எனப்படுகிறது. இவற்றை மருத்துவத்தால் பராமரிப்பவர்கள் கால்நடை டாக்டர் எனப்படும் கால்நடை மருத்துவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். துறை படிப்பு ஒருவர் கால்நடை மருத்துவராக பி.வி.எஸ்சி. அல்லது ஏ.எச்., படிப்பில் ஒன்றை படிக்க வேண்டும். 5 ஆண்டு படிக்க வேண்டிய இப்படிப்புகளில் கடைசி பருவத் தேர்வில் கட்டாய இன்டர்ன்ஷிப்பும் உள்ளது. 5 ஆண்டுகளில் விலங்குகளின் உடலியல், உணவு, அறுவை சிகிச்சையில் அவற்றுக்கு பிரசவம் பார்ப்பது என விலங்குகள் தொடர்பான பல அம்சங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த பட்டப் படிப்பை முடித்த பின்பு சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் இதில் எம்.வி.எஸ்சி. என்னும் பட்ட மேற்படிப்பைப் படிக்கலாம். சேரும் முறை பி.வி.எஸ்சி., படிக்க எம்.எச்.டி.-செட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் தேசிய அளவிலான சிறப்புப் பல்கலைக்கழகங்களில் அந்தப் படிப்பை படிக்கலாம். மும்பையிலுள்ள டைரக்டரேட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் என்னும் அமைப்பு இதை நடத்துகிறது. பொதுவாக இவற்றுக்கான சேர்க்கை ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் நாளிதழ்களில் வெளியாகின்றன. தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் இதை நடத்துகின்றன. முன்பு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. இப்போது கவுன்சலிங் மூலமாக இதில் சேரலாம். வேலை வாய்ப்புகள் இதில் பட்டப்படிப்பை முடித்தவுடனேயே மருத்துவராக பயிற்சியையும் பின்பு பணியையும் தொடங்கலாம். எனினும் ஒரு பாலிடெக்னிக்கிலோ அல்லது ஒரு மருத்துவமனையின் கால்நடை மருத்துவப் பிரிவிலோ சேருவது பணியை சுலபமாக்கும். கால்நடை அறிவியல் டாக்டர்களாக பயிற்சியை தொடங்குவது சிறிய பிராணிகள் தொடர்புடையதாகவோ அல்லது பெரிய பிராணிகள் தொடர்புடையதாகவோ 2 பிரிவுகளாக இருக்கிறது. இங்கு பணி புரிந்து கொண்டே மேற்கொண்டு ஆய்வுப் படிப்பைத் தொடரலாம். இந்தியாவின் புகழ் பெற்ற மருந்து தயாரிப்பகமான ரேன்பாக்ஸியின் ஆய்வுப் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் கால்நடை அறிவியல் டாக்டர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். சம்பளம் எப்படி? சாதாரண மருத்துவமனைகளைப் போன்ற பிராணிகளுக்கான மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனை அமைந்துள்ள இடம், சேவை தேவைப்படும் விலங்குகளை சார்ந்திருப்பவரின் பொதுவான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பொறுத்தே இத் துறையில் சம்பளம் அமைகிறது. நல்ல புகழ் பெற்ற மருத்துவமனைகளில் கால்நடை டாக்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளத் தரப்படுகிறது. தனியாக பயிற்சி செய்யும் இளம் கால்நடை டாக்டர்கள் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். எதிர்காலம் எப்படி? மாறிவரும் வாழ்க்கைத் தரத்தின் காரணமாக வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்நடை டாக்டர்களின் தேவையும் பெருகி வருகிறது. மருத்துவத்தையும் பிராணிகளையும் நேசிப்பவர்களுக்கு இது பொருத்தமான துறை. அக்கறை செலுத்தி குணப்படுத்தும் ஆர்வத்தையும் முனைப்பையும் பெற்றிருப்பவருக்கு இது நல்ல துறையாக அமையும். எங்கு படிக்கலாம்? இந்தியாவில் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாக பாம்பே கால்நடை அறிவியல் கல்லூரி(பரேல்), நாக்பூர் கால்நடை அறிவியல் கல்லூரி, கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் கல்லூரி பர்பானி மற்றும் கால்நடை மற்றும் விலங்குகள் அறி வியல் கல்லூரி, உத்கிர் ஆகியவற்றைக் கூறலாம். தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மெட்ராஸ் கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் நாமக்கல்லில் உள்ள கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை கூறலாம்.
  • விலங்கியல் - பி.எஸ்சி.,
Page no : 6
  .... 6 Next »Last »
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us