நூல் தயாரிப்பு, நூல்களை வெண்மையாக்குதல், மிளிர வைத்தல், ஆடை உருவாக்கம், சாயம் போடுதல், செயற்கை இழைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட ஜவுளித் தொழில்நுட்பங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. அத்துடன் டெக்ஸ்டைல் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடு குறித்த தொழில்நுட்பங்களும் கற்றுத்தரப்படுகின்றன.
டையிங், பினிஷிங், டெக்னிக்கல் சர்வீசஸ், ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட், குவாலிட்டி கண்ட்ரோல், புராடக்ட் டெவலப்மெண்ட் என டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்களில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். ரிலையன்ஸ், பாம்பே டையிங், நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், ஸ்ரீராம் பைபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.