வாழும் அல்லது பணிபுரியும் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்பவரை சுற்றுலாப் பயணி என்று அழைக்கிறோம். சுற்றுலாப் பயணியின் நோக்கம் இடங்களை பார்வையிடுவதும், பொழுது போக்குதலும்தான். என்றாலும் தொழில் நிமித்தமாக சுற்றுலா செல்வதும், மருத்துவ தேவைகளுக்காக சுற்றுலா வருவதும் இன்று அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறை சேவைகள், வாய்ப்புகளை இந்தப் பாடப்பிரிவில் கற்றுக் கொள்ள முடியும்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.