யுனான் எனும் வார்த்தையிலிருந்து யுனானி பெறப்பட்டது. இதற்கு கிரீஸ் என்பது அர்த்தமாகும். இம்மருத்துவ முறை கிரீஸ் நாட்டில் தோன்றியது. தத்துவ ஞானி ஹிப்போகிராட்டஸ் இதைக் கண்டறிந்தார். நோய் அறிகுறிகள், சிகிச்சை மருந்துகள் மூலம் உணவு மற்றும் ஓய்வு எனும் அடிப்படையில் முக்கிய சிகிச்சை முறைகள் அமைகின்றன. இம்மருத்துவ முறையில் துவக்க காலத்திலேயே அறுவை சிகிச்சை இடம்பெற்றிருந்தது. தற்போதுள்ள நவீன காலத்துக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் வளர்ந்துள்ளன.
படிப்பு காலம் 4 1/2 ஆண்டுகள். இதே பிரிவில் முதுநிலை உண்டு. அத்துடன் ஓர் ஆண்டு பயிற்சி காலமும் உண்டு.