வேதியியல் துறையின் பயன்பாடு சார்ந்த பிரிவுகளில் டெக்ஸ்டைல் வேதியியலும் ஒன்று. டெக்ஸ்டைல் துறையில் வேதிப்பொருட்களின் பயன்பாடு பற்றி இந்தப்படிப்பு கற்றுக்கொடுக்கிறது.
துணிவகைகள், தரைவிரிப்புகள், தையல் நூல்கள், விரிப்புகள் போன்ற டெக்ஸ்டைல் சார்ந்த பலதரப்பட்ட பொருட்களின் உற்பத்தியில் வேதிப்பொருட்களை பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள இந்த இளநிலை படிப்பு உதவுகிறது. குறிப்பாக சாயக்கலவை, சுத்தப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களில் டெக்ஸ்டைல் வேதியியல் முக்கியப்பங்கு வகிக்கிறது.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.