டெக்ஸ்டைல் புராசசிங் பாடத்திட்டத்தில் மூலப்பொருளை நூலாக மாற்றி, துணியாக இயந்திரத்தில் உருமாற்றுவது தொடர்பான பாடம் கற்றுத்தரப்படுகிறது. மேலும் துணி வகைகளில் டிசைனிங், டையிங், பிரிண்டிங் முதலிய பல வகையான வேலைகள் , துணிகளை தரம்பிரித்து ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற தகுதியுள்ள துணிவகைகளை தேர்வுசெய்தல், முதலிய தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.