இன்று உலகில் இன்டர்நெட்டின் பயன்பாடு பெருகி விட்டது. ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று ஒரு வெப்சைட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. எனவே வெப்சைட் உருவாக்குவது, வடிவமைப்பது தொடர்பான படிப்புகளுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த டிப்ளமோ படிப்பதன் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டின் அடிப்படைகள், கிராபிக்ஸ் பற்றிய விளக்கங்கள், போட்டோஷாப், எச்டிஎம்எல், ஜாவா ஸ்கிரிப்ட், மேக்ரோமீடியா பிளாஷ் 8, மேக்ரோமீடியா டிரீம் வீவர் 8 போன்றவை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.