கடல் தாவரத்தை பயிரிட்டு, தொழில் ரீதியாக வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தேவையான தொழில்நுட்ப நுணுக்கங்களை இந்த படிப்பு வழங்குகிறது. கடல் தாவரங்கள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள், அவற்றை பயிரிடும் செயல்முறைகள், சந்தைபடுத்தும் வழிகள் முதலிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடல் சார்ந்த இடங்களில் வசிக்கும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பாடத்திட்டம் உதவி புரிகிறது.