ரேடியேஷன் அண்ட் ரேடியோ ஐசோடோப் என்பது மருத்துவ துறையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த படிப்பில் கேன்சர் தொடர்பான வியாதிகளின் சிகிச்சை பற்றி விரிவாக விளக்கப்படுகிறது. ரேடியேஷன் தெரபி மற்ற வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட் மும்பையில் ரேடியேஷன் மெடிசின் இரண்டு வருட டிப்ளமோ படிப்பாகவும், ரேடியோ ஐசோடோப் டெக்னிசியஸ் ஒரு வருட டிப்ளமோ படிப்பாகவும் வழங்கப்படுகிறது.
தகுதி:
இந்த படிப்பிற்கு விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் எம்.பி.பி.எஸ், எம்.எஸ்சி., இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியல், உயிரி தொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல் போன்ற ஏதேனும் ஒன்றை பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை:
இந்த படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று அங்கீகாரம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி துறையின் சார்பில் மாதத்திற்கு தலா ரூ.9300௦௦௦ உதவித்தொகை வழங்கப்படுகிறது.